4053. |
தான
வக்குலம் விளக்கியே |
|
தாரகைச்
செல விளக்கியே
வான டர்த்த கயிலாயமே
வந்து மேவு கயிலாயமே
தானெ டுத்தவல் லரக்கனே
தடமுடித் திரள ரக்கனே
மேன டைச்செல விருப்பனே
மிழலை நற்பதி விருப்பனே. 8 |
தேவர்களின் கற்பக
விருட்சமே ஆயினீர். திருமால் முதலிய
தேவர்கட்கெல்லாம் கேட்டவற்றை ஒப்பின்றி வழங்கி வருவதால் உமது
திருக்கரம் கற்பகவிருட்சத்துக்குச் சமமாகும் என்பது முன்னிரண்டடிகளின்
கருத்து. மெய் - மெய்யுணர்தலோடு. பயின்றவர் - தவம் புரிவோர்களின்
உள்ளமே. இருக்கை - உமது இருப்பிடமாம். செப்புமின் - சொல்வீராக.
எருது மேயுமே - உமக்கென்றுள்ள விளைபுலமாகிய என் பெண்மை நலத்தில்
மன்மதன் அம்பாகிய எருது மேயல் ஆகுமா? தலைவிகூற்று. குறிப்புருவகம்.
சேர்வு - அதை ஓட்ட அங்கு வருவதற்கு நான்கனுருபுத் தொகை. உமக்கு
எருது ஏயும் - உமக்கு எருதும் இருக்குமே.
8.
பொ-ரை: சிவபெருமான், பகைத்து நிற்கும் அசுரர் அழிவர்
என்பதை விளக்கியவர். தாரகை முதலான ஒளிதரும் பொருள்களின்
ஒளியைத் தம் பேரொளியால் குன்றச் செய்தவர். வானை முட்டும் உயர்ந்த
கயிலைமலையைத் தம் வல்லமையால் எடுத்த அரக்கனான இராவணனின்
பெரிய முடிகளை நெரித்தவர். மனைகள் தோறும் சென்று பிச்சை எடுத்தலில்
விருப்பமுடையவர். திருவீழிமிழலை என்னும் நற்பதியில் விரும்பி
வீற்றிருந்தருளுபவர்.
கு-ரை:
தானவர்குலம் - அசுர குலத்தை. விளக்கி - (சிவனைப்
பகைத்த எவ்வலியினோரும் அழிவரென்பதை) விளக்கினீர். தாரகை -
தாரகை முதலாக ஒளிதரும் பொருளெல்லாவற்றின். செலவு - ஒளி வீசுவதை.
இளக்கி - உமது பேரொளியாற் குன்றச் செய்தீர். தாரகை - உபலட்சணம்.
இளகுதல் - திண்மை குலைதல். வான் - தேவர்களை. அடர்த்த - மோதிய.
கையில் ஆயம் - கையின் வலிமை மிகுதியினால். ஆயம் - கூட்டம். இங்கே
வலிமையின் மிகுதியைக் குறித்தது. கயிலாயம் எடுத்த அரக்கன். தட
முடித்திரள் அரக்கனே - பெரிய தலை
|