4060. |
நீவாவாயா
காயாழீ காவாவானோ வாராமே |
|
மேராவானோ
வாவாகா ழீயாகாயா வாவாநீ. 4 |
4061. |
யாகாலாமே
யாகாழீ யாமேதாவீ தாயாவீ |
|
வீயாதாவீ
தாமேயா ழீகாயாமே லாகாயா. 5 |
யாநம் - வடசொல்.
மா - இங்கு இரண்டாயிரம் கொம்புகளை உடைய
ஐராவணத்தைக் குறித்தது. தான + ஆழி - தீர்க்கசந்தி. கருணைக்கடல்
என்றது போல் கொடைக்கடல் என்றார். காசா:- மழபாடியுள் மாணிக்கமே
என்ற சுந்தரமூர்த்திகள் வாக்கால் அறிக. வாதம் - காற்று. உப
இலக்கணத்தால் ஏனைய பூதங்களையும் தழுவிற்று. இலக்கணக்குறிப்பு:
மூவாத்தாசா என்று மிக வேண்டியது இயல்பாயிற்று. காரணம் வருமொழித்
தகரம் வடமொழியின் மெல்லோசை உடைத்து ஆதலின். தாசன் - தத்தி
தாந்த பதம்.
4.
பொ-ரை: என்றும் மாறுதலில்லாத மெய்ப்பொருளானவனே.
தாங்கிய வீணையை உடையவனே. கொடிய பிறவித் துன்பம் எங்களை
அடையாவண்ணம் வந்து காத்தருள்வாயாக. விண்ணிலுள்ள தேவர்கள்
துன்பம் அடையாதவாறு மேருமலையை வில்லாக ஏந்தி முப்புரங்களை
அழித்தவனே. சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருள்பவனே,
ஆகாய சொரூபியே! நீ விரைந்து வருவாயாக! அருள் புரிவாயாக.
கு-ரை:
நீவா - என்றும் மாறாத. வாயா - உண்மைப்
பொருளானவனே. கா - தாங்கிய. யாழீ - வீணையினையுடையவனே.
வான்நோவாராமே - கொடிய பிறவித் துயரம் எம்மை எய்தாமல், காவா -
(காகா) வந்து காத்தருள்வாயாக, வான் - தேவர்கள். நோவாவா -
துன்பமடையாவாறு. மேரா - மேரு மலையை ஏந்தியவனே. காழீயா -
சீகாழிப் பதியுள் எழுந்தருளியுள்ளவனே. காயா - ஆகாய சொரூபியே.
வாவா நீ - நீ விரைந்து வருவாயாக. வாய் - உண்மை. காயாழி -
வினைத்தொகை. வான் நோ நல்ல பாம்பு என்பதைப்போல. வான் -
கொடுமையின் மிகுதி என்னும் பொருளில் வந்தது. காயா - முதற்குறை.
வாவா - அடுக்கு; விரைவுப் பொருட்டு.
5.
பொ-ரை: யாவற்றுக்கும் கால கர்த்தாவாக விளங்குபவனே.
எப்பொருளிலும் எள்ளில் எண்ணெய் போன்று உள்ளும், புறம்பும்
|