4062. |
மேலேபோகா
மேதேழீ காலாலேகா லானாயே |
|
யேனாலாகா
லேலாகா ழீதேமேகா போலேமே. 6 |
ஒத்து நிறைந்திருப்பவனே!
சீகாழி என்னும் திருத்தலத்தில்
வீற்றிருந்தருள்பவனே! அறிவில் மேம்பாடு உடையவனே! அனைத்துயிர்
கட்கும் தாயாகவும், உயிராகவும் உள்ளவனே! என்றும் அழிவில்லாதவனே!
இன்குரல் எழுப்பும் கின்னரம் முதலிய பறவைகள் தன்னருகின் வந்து
விழும்படி வீணைவாசிப்பவனே. யாங்கள் மேற்கொண்டு ஆவனவற்றிற்கு
ஆராயாதவாறு எங்களைக் காத்தருள் வாயாக!.
கு-ரை:
யா - எவையும் வணங்கத்தக்க. யா - எவற்றிற்கும். காலா -
கால வடிவமாக உள்ளவனே. மேயா - எவற்றினுள்ளும் எள்ளில் எண்ணெய்
போல் வியாபித்து இருப்பவனே. மேதாவீ - அறிவில் மேம்பட்டவனே. தாய்
ஆவி - எவ்வுயிருக்கும் தாயாகவும் உயிராகவும் உள்ளவனே. வீயாதா -
என்றும் அழிவில்லாதவனே. வீ - கின்னரம் முதலிய பறவைகள் (தாம் -
அசை) மே - தன்னருகில் வந்து விழும்படியாக. யாழீ - வீணைவாசிப்பவனே.
யாம் - நாங்கள். மேல் - மேற்கொண்டு. ஆகு - ஆவனவற்றிற்கு. ஆயா -
ஆயாதவாறு. கா - எம்மைக் காப்பாயாக (இலக்கணக்குறிப்பு)
காலதத்துவமாக உள்ளவன் சிவபெருமானே என்பது காலமே உனை என்று
கொல் காண்பதே (திருவாசகம்) ஆயா - ஈறு கெட்ட எதிர் மறைவினை
எச்சம். ஈற்றுத் தொடரில் ஆய்தலாவது. மண்மேல் யாக்கை விடுமாறும்
வந்துன் கழற்கேபுகுமாறும் அண்ணா எண்ணக் கடவேனோ என்பது
(திருவாசகக் (தி.8) கருத்து) வீதாமேயாழி - யாழிசையிற் பறவைகள் வந்து
வீழ்வதைக் காந்தவருவதத்தையார் இலம்பகத்தாலும் அறிக. யாழீ -
என்பதற்கு குழலன்கோட்டன் என்ற திருமுருகாற்றுப் படை (தி.11)க்கு
நச்சினார்க்கினியர் உரைத்தது உரைக்க.
6.
பொ-ரை: மார்க்கண்டேயரின் உயிரைக் கவர வந்த காலனைக்
கடுங்குரலால் கண்டித்தவரே. உம் திருவடியால் அவனை உதைத்து
அக்காலனுக்குக் காலன் ஆகியவரே. பொருந்திய சனகர் முதலிய
நால்வர்க்கும் சிவகுருவாகிக் கல்லால மரத்தின் கீழ் உபதேசித்து
மெய்யுணர்வு பெறச் செய்தவரே. சீகாழி என்னும் திருத்தலத்தில்
வீற்றிருந்தருளும் பரம்பொருளே. மேகத்தை வாகனமாகக்
கொண்டருளியவரே. அடியேங்கள் உம் திருக்கூட்டத்தில் ஒருவர் போல்
ஆவோம்.
|