4067. |
நேரகழாமித
யாசழிதா யேனனியேனனி ளாயுழிகா |
|
காழியுளானின
யேனினயே தாழிசயாதமி ழாகரனே. 11 |
திருச்சிற்றம்பலம்
கு-ரை:
வேரி - மணம். ஏண் - பெருமை. நவம் - புதுமை.
காழியாயே:- ஏனை - துன்பத்தையும். நீள்நேம் - மிக்க அன்பையும். அடு -
முறையே ஒழி(த்தலும்) அள் - அள்ளிக்கொள்ளுதலுமாகிய செய்கை. ஓகரது
ஏ - யோகிகளுடைய செய்கையே. தேரகளோடு - தேரர்களின்
உபதேசங்களோடு. அமணே - அமணர்களின் உபதேசங்களையும். நினை -
நினைத்தலையும். ஏய் - அவரோடு பொருந்துதலையும். ஒழி - ஒழிப்பீராக.
காவணமே - அந்நெறிகளிற் சேராமற்காக்கும் திறம். உரிவே - உமக்கு
உரியவேயாகும். உரிவே - உரியவே என்பதன் மரூஉ.
11.
பொ-ரை: நேர்மையை அகழ்ந்து எறிவதாகிய, நெஞ்சத்தில்
நிலைத்து எவரையும் துன்புறுத்தும் காமம், வெகுளி, மயக்கம் என்னும்
முக்குற்றங்களையும் அழித்தருள வல்லவனே. உலகுக்கெல்லாம் தாயாம்
தன்மையை ஏற்றருளத் தக்கவன், ஒப்பில்லாத நீ ஒருவனே. நன்மை
புரிந்தருளுவதில் உயர்ந்தவனே! நாங்கள் தளர்ந்த இடத்து எங்களைக்
காத்தருள்வாயாக! என்று நற்றமிழுக்கு உறைவிடமாகவுள்ள திரு
ஞானசம்பந்தப் பெருமான் சிவபெருமானைப் போற்றி அருளிய,
பாடுவோர்களையும், கேட்போர்களையும் உள்ளம் குழையச் செய்யும்
இத்திருப்பதிகத்தை ஓதவல்லவர்கட்கு எந்தக் குறைவும் உண்டாகாது.
கு-ரை:
நேர் - நேர்மையை. அகழ் ஆம் - கல்லியெறிவதாகிய.
இதய - ஆசு - மனத்துக் கண் எழும் (காம வெகுளி மயக்கம் என்னும்)
முக் குற்றங்களையும். அழி - அழிக்கவல்லவனே. அழீ என்பதன்
குறுக்கல்விகாரம். தாய் ஏல் நன் நீயே - உலகக்கெல்லாம் தாயாந்
தன்மையை யேற்கத்தக்கவன் நீ ஒருவனே. மூவேழுலகுக்கும் தாயே என்ற
திருவாசகத்தும் அறிக. (தி.8 புணர்ச்சிப்பத்து) வாழ்+ ந்+ அன் = வாணன்
என்றாகியதுபோல ஏல் + ந + அன் = ஏனன் என்றாகியது. நல் - நன்மை
புரிவதில். நீள் - மிக்கோனே. நீள் முதனிலைத் தொழிற்பெயராய்
ஆகுபெயர்ப் பொருளில் நின்று குறுக்கல் விகாரமுற்ற விளிவேற்றுமை.
ஆய் உழிகா - தளர்ந்த இடத்துக் காப்பாயாக. தமிழாகரன் - தமிழே
உடம்பாக உடைய திருஞானசம்பந்தனே. காழியுளானின் - சீகாழிப்
பதியானைப்பற்றிய. நையே - கேட்டோர்மனம் குழைப்பதாகிய இப்
பாடல்களை. நினையே - நினைத்துப் பாடவே. தாழ்(வு). குறைவும் - இசையா
- உண்டாகா.
|