|
விருதினான்
மறையு மங்கமோ ராறும்
வேள்வியும் வேட்டவர் ஞானங்
கருதினா ருலகிற் கருத்துடை யார்சேர்
கழுமல நகரென லாமே. 5 |
4073. |
புற்றில்வா
ளரவு மாமையும் பூண்ட |
|
புனிதனார்
பனிமலர்க் கொன்றை
பற்றிவான் மதியஞ் சடையிடை வைத்த
படிறனார் பயின்றினி திருக்கை
செற்றுவன் றிரைக ளொன்றொடொன் றோடிச்
செயிர்த்துவண் சங்கொடு வங்கங்
கற்றுறை வரைகள் கரைக்குவந் துரைக்குங்
கழுமல நகரென லாமே. 6 |
புரிந்த சிவபெருமான்
பயின்று இனிதாக வீற்றிருந்தருளும் இடமாவது,
வழிவழிக் கேட்கும் தொழிலாகப் பயின்று வரும் புகழுடைய நான்கு
வேதங்களையும், ஆறு அங்கங்களையும் அறிந்து, அவற்றின்படி வேத
வேள்விகளைச் செய்பவர்களும், ஞான வேட்கை உடையவர்களும், உலகில்
பிறந்ததன் பெரும்பயனை அடைய விரும்பும் கருத்துடையவர்களும்
வசிக்கின்ற திருக்கழுமலநகர் எனக் கூறலாம்.
கு-ரை:
சுருதியான் - பிரமா. சுருதியான் தலையும் நாமகள் மூக்கும்:-
கணவனுக்குத் தலையும் மனைவிக்கு மூக்கும் போயினது என்பது ஓர் நயம்.
சுடரவன் - அக்கினி. கரம் - கையை (வெட்டினமை) வெய்யவன் அங்கி
விழுங்கத் திரட்டிய கையைத் தறித்தான் என்று உந்தீபற (தி.8
திருவுந்தியார்-7)
6.
பொ-ரை: புற்றில் வாழுந் தன்மையுடைய ஒளிமிக்க பாம்பையும்,
ஆமையோட்டையும் ஆபரணமாகப் பூண்ட புனிதரும், குளிர்ச்சி பொருந்திய
கொன்றை மலருடன், வானத்திலுள்ள சந்திரனையும் சடையில் வைத்த எம்
உள்ளம் கவர் கள்வருமான சிவபெருமான் பயின்று இனிதாக
வீற்றிருந்தருளும் இடம், வலிய அலைகள் ஒன்றோடொன்று மோதிப்
பொரும் கடலானது வளமையான சங்குகளோடு, கப்பல்களையும் கொண்டு
வந்து மலைகள் போலக் கரை வந்து சாரச்செய்யும் திருக்கழுமலநகர் எனக்
கூறலாம்.
கு-ரை:
படிறனார் - வஞ்சகர். காலில் தேய்த்த மதியையே
|