4076. |
அருவரை
பொறுத்த வாற்றலி னானு |
|
மணிகிளர்
தாமரை யானும்
இருவரு மேத்த வெரியுரு வான
விறைவனா ருறைவிடம் வினவில்
ஒருவரிவ் வுலகில் வாழ்கிலா வண்ண
மொலிபுனல் வெள்ளமுன் பரப்பக்
கருவரை சூழ்ந்த கடலிடை மிதக்குங்
கழுமல நகரென லாமே. 9 |
4077. |
உரிந்துய
ருருவி லுடைதவிர்ந் தாரு |
|
மத்துகில் போர்த்துழல் வாருந்
தெரிந்துபுன் மொழிகள் செப்பின கேளாச்
செம்மையார் நன்மையா லுறைவாங் |
சிவபெருமான் விரும்பி
வீற்றிருந்தருளும் கோயிலுள்ள திருத்தலமாவது
பரவுதலையுடைய மெய்ம்மையான புகழையுடையவரும், குற்றங்கள்
வாராவண்ணம் நன்கு ஆராய்ந்து ஒல்லும் வகையான் ஓவாது அறம்புரியும்
மிக்க பயிற்சியுடையாரும், கனவிலும் கரக்கும் எண்ணம் இல்லாத
வள்ளன்மையுடையாரும் ஆகிய செந்நெறிச் செல்வர்கள் வாழும்
கழுமலநகரெனக் கூறலாம்.
கு-ரை:
உழறிய - உழற்றிய; கலங்கச் செய்த. இசைநோக்கி உழறிய
என்று ஆயிற்று. பயிற்றி - மிகச்செய்து.
9.
பொ-ரை: கோவர்த்தன மலையைக் குடையாகத் தாங்கிய
ஆற்றலுடைய திருமாலும், அழகிய செந்தாமரை மலரில் வீற்றிருக்கும்
பிரமனும் ஏத்தித் துதிக்கும்படியாகத் தீப்பிழம்பின் உருவாய் நின்ற
சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், ஒருவரும் இவ்வுலகில் வாழ இயலா
வண்ணம், பேரூழிக் காலத்தில் பெருவௌள்ம் பெருக்கெடுக்க, அப்பரப்பில்
கருவரை போன்ற திருமால் கிடந்து அறிதுயில் கொள்ளும் கடலிடைத்
திருத்தோணி போன்று மிதந்த சிறப்பு வாய்ந்த திருக்கழுமலநகர் எனக்
கூறலாம்.
கு-ரை:
அருவரை - கோவர்த்தனமலை. கருவரை - கரிய மலை
போன்ற மலை - அன்மொழித் தொகை.
10.
பொ-ரை: உயர்ந்த தமது உடலின்றும் உடையினை நீக்கிய
சமணர்களும், மிக்க ஆடையினை உடல் முழுவதும் போர்த்துத்
|