பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)119. திருவீழிமிழலை1327

4083. கூசுமா மயானங்
       கோயில்வா யிற்கட்
குடவயிற் றனசில பூதம்
     பூசுமா சாந்தம் பூதிமெல் லோதி
பாதிநற் பொங்கர வரையோன்
     வாசமாம் புன்னை மௌவல்செங் கழுநீர்
மலரணைந் தெழுந்தவான் தென்றல்
     வீசுமாம் பொழிற்றேன் றுவலைசேர் வீழி
மிழலையா னெனவினை கெடுமே.             5

4084. பாதியோர் மாதர் மாலுமோர் பாகர்
       பங்கயத் தயனுமோர் பாலர்
ஆதியாய் நடுவா யந்தமாய் நின்ற
     வடிகளா ரமரர்கட் கமரர்
போதுசேர் சென்னிப் புரூரவாப் பணிசெய்
     பூசுரர் பூமக னனைய
வேதியர் வேதத் தொலியறா வீழி
     மிழலையா னெனவினை கெடுமே.        6


5. பொ-ரை: எவரும் அடைவதற்குக் கூச்சப்படுகின்ற மயானத்தில் பெரிய
வயிற்றையுடைய பூதங்கள் சூழ நறுமணம் கமழும் சாந்துபோலத்திருநீறு பூசிப்,
பார்வதிபாகராய், ஆடுகின்ற பாம்பை இடுப்பில் அணிந்து விளங்குபவர்,
சிவபெருமான். அவர் நறுமணம் கமழும் புன்னை, முல்லை, செங்கழுநீர் மலர்
ஆகிய மணங்கமழும் மலர்களில் கலந்து தென்றல் வீசும் சோலைகளிலிருந்து
தேன்துளிகள் சிதறும் திருவீழிமிழலையில் வீற்றிருந்தருளுவார். அப்
பெருமானின் திருநாமத்தை ஓத வினையாவும் நீங்கும்.

     கு-ரை: கூசும் - எவரும் அடைவதற்குக் கூசுகின்ற. குடவயிறு - குடம்
போலும் வயிறு.

     6. பொ-ரை: இறைவன் உமாதேவியைத் திருமேனியில் ஒருபாகமாகக்
கொண்டு விளங்குபவர். திருமாலும், பிரமனையும் தம்பாகமாகக் கொண்டு
ஏகபாத திரிமூர்த்தியாகத் திகழ்பவர். அவர் உலகத் தோற்றத்திற்கும்,
நிலைபெறுதலுக்கும், ஒடுக்கத்திற்கும் நிமித்த காரணராய் விளங்கும் தலைவர்.
தேவர்கட்குக் கடவுள். மலரணிந்த