பக்கம் எண் :

1334திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

சந்தமார் தரளம் பாம்புநீர் மத்தந்
     தண்ணெருக் கம்மலர் வன்னி
அந்திவான் மதிசேர் சடைமுடி யண்ண
     லாலவா யாவது மிதுவே.                3

4093. கணங்களாய் வரினுந் தமியராய் வரினு
       மடியவர் தங்களைக் கண்டால்
குணங்கொடு பணியுங் குலச்சிறை குலாவுங்
     கோபுரஞ் சூழ்மணிக் கோயில்
மணங்கமழ் கொன்றை வாளரா மதியம்
     வன்னிவன் கூவிள மாலை
அணங்குவீற் றிருந்த சடைமுடி யண்ண
     லாலவா யாவது மிதுவே.               4


சிவபெருமானது திருநீற்றின் பெருமையை வளர்ப்பவர். விரல்நுனி பந்து
போன்று திரட்சியுடைய பாண்டிமா தேவியார் சிவத்தொண்டு செய்ய, உலகில்
சிறந்த நகராக விளங்குவதும், அழகிய முத்துக்கள், பாம்பு, கங்கை, ஊமத்தை,
குளிர்ச்சி பொருந்திய எருக்க மலர், வன்னிமலர், மாலைநேரத்தில் தோன்றும்
பிறைச்சந்திரன் இவற்றை சடைமுடியில் அணிந்துள்ள தலைவரான
சிவபெருமான் வீற்றிருந்தருளுவது ஆகிய திருஆலவாய் என்னும் திருத்தலம்
இதுவேயாகும்.

     கு-ரை: பந்தணை விரலாள் - மகளிர் விரல் நுனியின் திரட்சிக்குப்
பந்தினை உவமை கூறுதல் மரபு

.      4. பொ-ரை: சிவனடியார்கள் கூட்டமாக வந்தாலும், தனியராக
வந்தாலும், அவர்களைக் காணும்போது அவர்களின் குணச்சிறப்புக்களைக்
கூறி, வழிபடும் தன்மையுடைய குலச்சிறையார் வழிபாடு செய்யும், கோபுரங்கள்
சூழ்ந்த அழகிய கோயிலைக் கொண்டதும், மணம் கமழும் கொன்றை, பாம்பு,
சந்திரன், வன்னி, வில்வம், கங்கை இவை விளங்கும் சடைமுடியுடைய
சிவபெருமான் வீற்றிருந்தருளுவதும் ஆகிய திருஆலவாய் என்னும்
திருத்தலம் இதுவே யாகும்.

     கு-ரை: அணங்கு - தெய்வப் பெண் (இங்கே கங்கை).