125. திருநல்லூர்ப்
பெருமணம்
|
பதிக வரலாறு:
அலகில்லாத
மெய்ஞ்ஞானத்தின் எல்லை அடைவுறும் குறிப்பால்,
தொண்டர் கூட்டமும் பெருங்கிளையும் மல்கிச் சூழக் கோயிலை அடைந்தார்
தவநெறி வளர்க்கவந்த ஞானசம்பந்தர். பவம் அற என்னை முன்னாள்
ஆண்ட அப் பண்பு கூட நவமலர்ப்பாதம் கூட்டும் என்னும் நல்லுணர்வு
நல்கியது திருவருள். பிறவிப் பாசம் தீர்த்தலைச் செம்பொருளாகக் கொண்டு
நாதனே நல்லூர் மேவும் பெருமண நம்பனே உன் பாத மேய்ந் நீழல்
சேரும் பருவம் ஈது என்று பாடியருளியது இக் காதல் மெய்ப் பதிகம்
பண்:
அந்தாளிக்குறிஞ்சி
ப.தொ.எண்:383 |
|
பதிக
எண்: 125 |
திருச்சிற்றம்பலம்
4137. |
கல்லூர்ப்
பெருமணம் வேண்டா கழுமலம் |
|
பல்லூர்ப்
பெருமணம் பாட்டுமெய் யாய்த்தில
சொல்லூர்ப் பெருமணம் சூடல ரேதொண்டர்
நல்லூர்ப் பெருமண மேயநம் பானே. 1 |
1.
பொ-ரை: அடியார்கள் சூழ, திருநல்லூர் என்னும் திருத்தலத்தில்
பெருமணம் என்னும் கோயிலில் வீற்றிருந்தருளும் சிவபெருமானே! மிக்க
மணமாகிய பொருள்கள் பொருந்திய பாடல்களாகிய மலர்களைச் சூடுதலை
உடையீர். அம்மிக்கல் மிதித்துச் செய்யும் சடங்குகள் பலவுடைய திருமணம்
எனக்கு வேண்டா. கழுமலம் முதலாகிய பல திருத்தலங்களிலும் சென்று நான்
பாடிய திருப்பதிகங்கள் வாயிலாக என்னுடைய விருப்பம் மெய்யாகத்
தெரியவில்லையா? என இறைவனிடம் வினவுகின்றார்.
கு-ரை:
திருமணத்தில் தமக்கு விருப்பமில்லை என்பதைக் குறித்தது.
தொண்டர் - அடியார்கள் சூழ்ந்த. நல்லூர்ப்பெருமணம் - திரு
நல்லூர்ப்பெருமணம் எனும் தலத்தில். மேய - மேவிய. நம்பனே -
சிவபெருமானே. பெருமணம் - மிக்க மணமாகிய பொருள்கள். ஊர் -
பொருந்திய. சொல் - பாடல்களாகிய மலர்களை. சூடலரே -
|