பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)125. திருநல்லூர்ப்பெருமணம்1369

4138. தருமண லோதஞ்சேர் தண்கட னித்திலம்
  பருமண லாக்கொண்டு பாவைநல் லார்கள்
வருமணங் கூட்டி மணஞ்செயு நல்லூர்ப்
பெருமணத் தான்பெண்ணோர் பாகங் [கொண்டானே. 2


சூடுதலை உடையீர்! கல் ஊர் - அம்மியின்மேல் மனைவியின் காலை
வைத்தல் முதலிய சடங்குகளை உடையதாகிய, பெருமணம் - பெரிய
திருமணம். வேண்டா - எனக்கு வேண்டா. கழுமலம் - திருக்கழுமலம்
முதலாகிய. பல்லூர் - பலதலங்களிலும் (நான் - பாடிய), பாட்டு - தேவாரப்
பதிகங்களும். மெய் ஆய்த்தில - மெய்யாக வில்லையா? எத்தலத்திலேனும்
எனக்குத் திருமணம் வேண்டுமென்று கேட்டதுண்டா? ஆய்த்து - ஆயது.
“நரரிடைப் பாலன் செய்தபாதகம் நன்மையாய்த்தே” என்ற சித்தியாரிற்போல.
கல்லூர்ப் பெருமணம்:- கல்லூர் + பெருமணம் இரண்டனுருபும் பயனும்
உடன் தொக்க தொகை. மெய்யாய்த்தில - இதில் வினா எழுத்து மறைந்து
நின்றது. “தெருளில்நீர் இது செப்புதற்காம்” (தி.12 பெரிய புராணம் - 9)
சொல்லூர் பெருமணம் ஏகதேச உருவகம். சொல் - பாடலுக்கானது
ஆகுபெயர். நம்பன், நம்பான் என ஈற்றயல் நீண்டு விளித்தது. ஏகாரம்
ஈற்றசை.

     2. பொ-ரை: கடலலைகள் அழித்துவிடாமல் வைத்துள்ள இயற்கைக்
கரையிலுள்ள மணலோடு, பதுமை போன்ற சிறுமியர் அலைகள் வீசிக்குவித்த,
குளிர்ச்சி பொருந்திய கடலில் விளைந்த முத்துக்களையே, பருத்த மணலாகக்
கொண்டு சிற்றில் இழைத்து, சிறுசோறிட்டு, நறுமணம் கமழும் மலர்களை
வைத்துக் கொண்டு, பாவைகட்கு மணம் செய்து விளையாடுகினற
சிறப்பினையுடையது நல்லூர்ப் பெருமணம். அப்பெருமணத்
திருக்கோயிலின்கண் வீற்றிருந்தருளும் சிவபெருமான் தன்னிற் பிரிவில்லா
உமாதேவியை இடப்பாகமாகக் கொண்டருளினன்.

     கு-ரை: சிறுமியர் விளையாட்டு: பாவை நல்லார்கள் - பதுமைபோன்ற
சிறுமியர்கள். தரு - பொருந்திய. மணல் - மணலோடு. ஓதம் - அலைகள்.
சேர் - வீசிக்குவித்த. தண்கடல் நித்திலம் - குளிர்ந்த கடலில் உண்டாகிய
முத்துக்களையே. பருமணலாகக்கொண்டு - பருத்த மணலாகக்கொண்டு.
வரும்மணம் - பொருந்திய மணத்தை உடைய மலர் முதலியவைகளை. கூட்டி
- வைத்துக் கொண்டு. மணம் செயும் - மணம் செய்து விளையாடுகின்ற
(நல்லூர்ப் பெருமணம்)