பக்கம் எண் :

1370திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

4139. அன்புறு சிந்தைய ராகி யடியவர்
  நன்புறு நல்லூர்ப் பெருமண மேவிநின்
றின்புறு மெந்தை யிணையடி யேத்துவார்
துன்புறு வாரல்லர் தொண்டுசெய் வாரே.        3

4140. வல்லியந் தோலுடை யார்ப்பது போர்ப்பது
  கொல்லியல் வேழத் துரிவிரி கோவணம்
நல்லிய லார்தொழு நல்லூர்ப் பெருமணம்
புல்கிய வாழ்க்கையெம் புண்ணிய னார்க்கே.    4


பெண் ஓர் பாகம் கொண்டான் - பெண்ணை இடப்பாகத்தில் கொண்டவன்.
கடந்த ஞானிகளுக்கே இல்லறத்தார் நடத்தும் மனைவாழ்க்கை வீதியில்
சிறுமியர்கள் மணம்செய்து விளையாடும் விளையாட்டைப் போன்று
தோன்றும் என்பது இப்பாடலால் குறிக்கப்பெறுகிறது. பெண் ஓர்பாகம்
கொண்டான் ஆதலின் என்னையும் இவ்வாறு அருளினான்.

     3. பொ-ரை: மெய்யடியார்கள் சிவபெருமானிடம் கொண்ட பத்தி
காரணமாக, அனைத்துயிர்களிடத்தும் நீங்காத அன்பு நிறைந்த
சிந்தையராவர். அவர்கள் சிவத்தை வழிபடுகின்ற நற்றவத்தைச் செய்வர்.
அவர்கள் திருநல்லூர் என்னும் திருத்தலத்தில், பெருமணம் என்னும்
கோயிலில் விரும்பி வீற்றிந்தருளுகின்ற, அனைத்துயிர்கட்கும் இன்பம்
தருகின்ற எம் தந்தையாகிய சிவபெருமானின் திருவடிகளைப் போற்றி
வணங்குவார்கள். அத்தகைய வழிபாடு செய்பவர்கட்கு எக்காலத்திலும்
துன்பம் இல்லை. அவர்கள் நாளும் நல்லின்பத்தை மிகுவிக்கும் சிவத்
தொண்டு செய்வர்.

     கு-ரை: அடியவர் பெருமை: நன்புஉறு - முத்தியை அடைகின்ற. நன்பு
- பு, பண்புப்பெயர் விகுதி. ஆகுபெயர். “இணையடி ஏத்துவார்
துன்புறுவாரல்லர் தொண்டு செய்வார்” தாம் செய்வன சிவனுக்கு என்றும்,
வருவன அனைத்தும் அவன் அருள் என்றும் தொண்டு செய்வார் ஆகலின்
இணையடி புத்திபண்ணி ஏத்துவார் துன்புறு வாரல்லர் என்று கூறினார்.

     4. பொ-ரை: சிவபெருமான் வலிமையான புலியின் தோலை
ஆடையாக உடுத்துள்ளவர். கொல்லும் தன்மையுடைய யானையின் தோலைப்
போர்வையாகப் போர்த்தவர். விரிந்த கோவணத்தை