பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)125. திருநல்லூர்ப்பெருமணம்1371

4141. ஏறுகந் தீரிடு காட்டெரி யாடிவெண்
  ணீறுகந் தீர்நிரை யார்விரி தேன்கொன்றை
நாறுகந் தீர்திரு நல்லூர்ப் பெருமணம்
வேறுகந் தீருமை கூறுகந் தீரே.               5

4142. சிட்டப்பட் டார்க்கெளி யான்செங்கண் வேட்டுவப்
  பட்டங்கட் டுஞ்சென்னி யான்பதி யாவது


அணிந்தவர். அப்பெருமான் சிவநெறி ஒழுகும் நற்பண்பாளர்களால்
தொழப்படும் வண்ணம் திருநல்லூர் என்னும் திருத்தலத்தில் பெருமணம்
என்னும் திருக்கோயிலில் விரும்பி வீற்றிருந்தருளும் வாழ்க்கையையுடையவர்.
இதுவே புண்ணியரான சிவபெருமானின் இயல்பாகும்.

     கு-ரை: இறைவன் கோலம்: வல்லியந் தோல் - புலித்தோல்
வன்மைக்கு இனமாகத் திரிந்தது. செவிக் கினிமை கருதி. உடை ஆர்ப்பது
- உடையாக இடுப்பில் உடுப்பது; வேழத்துரி போர்ப்பது - யானையின்
தோல் போர்வையாகப் போர்ப்பது. விரி கோவணம் - படம் விரித்த
பாம்பினைக் கோவணமாகக் கட்டுவது. விரி - முதனிலைத் தொழிற்பெயர்.
ஆகுபெயர். நல்லியலார் - நற்பண்புகளை உடைய மெய்யடியார். இவை
நல்லூர்ப் பெருமண வாழ்க்கை எம் புண்ணியனார் கோலங்களாம்.

     5. பொ-ரை: இறைவனே! நீவிர் இடபத்தை விரும்பி வாகனமாகக்
கொண்டுள்ளீர். நெருப்பேந்திச் சுடுகாட்டில் ஆடுகின்றீர். திரு
வெண்ணீற்றினை விரும்பிப் பூசியுள்ளீர். வரிசையாக அழகுடன் விளங்கும்
தேன் துளித்து நறுமணம் கமழும் கொன்றை மாலையை அணிந்துள்ளீர்.
செல்வம் பெருகும் திருநல்லூர் என்னும் திருத்தலத்தில், பெருமணம்
என்னும் திருக்கோயிலில் விரும்பி வீற்றிருந்தருளும் நீர் உமாதேவியை ஒரு
கூறாகக் கொண்டு உகந்துள்ளீர்.

     கு-ரை: இறைவன் செயல்: ஏறு - இடபத்தை. உகந்தீர் - விரும்பி
ஏறினீர். நிறை - வரிசையாக. ஆர் - பொருந்திய. விரி - மலர்ந்த. தேன்
- தேனைஉடைய. கொன்றை - கொன்றை மலரின். நாறு - மணம் வீசுதலை.
உகந்தீர் - விரும்பினீர். நாறு - நாறுதல் (நல்லூர்ப் பெருமணத்து)
வேறுகந்தீர் - வேறாக விரும்பினீர்!

     6. பொ-ரை: சிவபெருமான் நியமம் தவறாது வழிபடுபவர்கட்கு