பக்கம் எண் :

1374திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

4146. ஆத ரமணொடு சாக்கியர் தாஞ்சொல்லும்
  பேதைமை கேட்டுப் பிணக்குறு வீர்வம்மின்
நாதனை நல்லூர்ப் பெருமண மேவிய
வேதன தாள்தொழ வீடெளி தாமே.          10

4147. நறும்பொழிற் காழியுண் ஞானசம் பந்தன்
  பெறும்பத நல்லூர்ப் பெருமணத் தானை


காண்கிலர். நால்வேதங்களை அருளிச் செய்த சிவபெருமானே
அவ்வேதங்களின் உட்பொருளாய் விளங்குகின்றார் என நல்லோர் நுவல்வர்.
அப்பெருமான் திருநல்லூர் என்னும் திருத்தலத்தில், பெருமணம் என்னும்
திருக்கோயிலில் நிலையாக வீற்றிருந்தருளுகின்றார்.

     கு-ரை: இறைவன் பெருமை: தம்மாண்பு - தமது பெருமையை.
(தாமரையானும் மாலும் அறிகின்றிலர்). தம்பாட்டு - தம்முடைய பாடல்,
மாமறை நாலும் என்பர். (அதுபோலவே) தம் கோயில் - தமது கோயில்
நல்லூர்ப் பெருமணம் என்பர்.

     10. பொ-ரை: இறைவனை உணரும் அறிவில்லாத சமணர்கள்,
பௌத்தர்கள் ஆகியோர்கள் கூறும் புன்னெறியைக் கேட்டு, நன்னெறியாம்
சித்தாந்தச் சிவநெறிக்கண் இணங்காது பிணங்கி நிற்கும். பெற்றியீர்!
வாருங்கள். அனைத்துயிர்க்கும் தலைவன் சிவபெருமான். திருநல்லூர்
என்னும் திருத்தலத்தில் பெருமணம் என்னும் திருக்கோயிலில்
வீற்றிருந்தருளுகின்ற வேதங்களின் பொருளான சிவபெருமானின்
திருவடிகளை வழிபடுங்கள். அவ்வாறு வழிபட்டால் வீடுபேறு எளிதில்
கிட்டும்.

     கு-ரை: அனைவரையும் அழைத்தல்: நாதனும் (நல்லூர் பெருமணம்
மேவிய) வேதன் - வேதங்களின் பொருளாகியவனும் ஆகிய சிவ
பெருமானின், தாள்தொழ - திருவடிகளை வணங்க. வீடு - (அரியதாகிய)
முத்திஉலகம், எளிதாம் - எளியதாகும். ஆதர் - அறிவிலிகள்.

     11. பொ-ரை: நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த சீகாழியில்
அவதரித்த திருஞானசம்பந்தன், பெறுதற்கரிய முத்திப்பேற்றை அருளும்,
திருமணநல்லூர் என்னும் திருத்தலத்தில், பெருமணம்