பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)125. திருநல்லூர்ப்பெருமணம்1373

4144. தக்கிருந் தீரன்று தாளா லரக்கனை
  உக்கிருந் தொல்க வுயர்வரைக் கீழிட்டு
நக்கிருந் தீரின்று நல்லூர்ப் பெருமணம்
புக்கிருந் தீரெமைப் போக்கரு ளீரே.         8

4145. ஏலுந்தண் டாமரை யானு மியல்புடை
  மாலுந்தம் மாண்பறி கின்றிலர் மாமறை
நாலுந்தம் பாட்டென்பர் நல்லூர்ப் பெருமணம்
போலுந்தங் கோயில் புரிசடை யார்க்கே.      9


களையுடையவன். வெண்ணீற்றுமை பாகத்தன் - திருவெண்ணீற்றுமை
யம்மையை இடப்பாகமாக உடையவர். பந்தித்த - கச்சாகக் கட்டிய.
நாகத்தன் - பாம்பை உடையவன். (நல்லூர்ப் பெரு மணத்தான்). நல்ல
போகத்தன் - உமையம்மையை இடப் பாகமாக உடையவனாகி மிக்க
போகத்தை உடையவன்போல் காணப்படினும். யோகத்தைப் புரிந்தான் -
உண்மையில் அவன் யோகத்தையே செய்தான்.

     8. பொ-ரை: இறைவனே! யாண்டும் உம்முடைய சிறந்த முழுமுதல்
தன்மைக்கேற்ப வீற்றிருந்தருளுகின்றீர். முன்னாளில் இலங்கையை ஆண்ட
அசுரனான இராவணன் கயிலையைப் பெயர்த்தெடுக்க முயன்றபோது,
உயர்ந்த அம்மலையின்கீழ் அவன் உடல் குழைந்து நொறுங்கும்படி சிரித்துக்
கொண்டிருந்நீர். இந்நாளில் திருமணநல்லூர் என்னும் திருத்தலத்தில்
பெருமணம் என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்து அருள்புரிகின்றீர்.
அடியார்களாகிய நாங்கள் உம் திருவடிகளைச் சேர்வதற்கு அருள்புரிவீராக!.

     கு-ரை: வேண்டுகோள்: தக்கு இருந்தீர் - தக இருந்தீர். உக்கு இருந்து
ஒல்க - உடல் நொறுங்கிக் குழைய. வரைக்கீழ் இட்டு - கயிலை மலையின்
கீழ் அழுத்தி. நக்கு இருந்தீர் - சிரித்துக்கொண்டிருந்தீர். அன்று - இது
அக்காலத்துச் செய்தது. இன்று - இன்றைக்கும் இராவணனைத் தன் வழியில்
செல்ல அருளியதைப்போல. எமை - எங்களை. போக்கு - உமது திரு
வடியில் சேர்வதற்கு. அருளீர் - அருளுவீர்களாக.

     9. பொ-ரை: குளிர்ச்சி பொருந்திய செந்தாமரையில் வீற்றிருக்கும்
பிரமனும், திருமாலும் சிவபெருமானுடைய மாண்பை ஒரு சிறிதும் அறிந்திலர்.
இறைவனின் அடிமுடியைத் தேட முயன்றும்