பக்கம் எண் :

1378திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

கிரியுந் தருமா ளிகைச்சூ ளிகைதன்மேல்
விரியுங் கொடிவான் விளிசெய் விடைவாயே.    5

4153. கிள்ளை மொழியா ளையிகழ்ந் தவன்முத்தீத்
  தள்ளித் தலைதக் கனைக்கொண் டவர்சார்வாம்
வள்ளி மருங்குல் நெருங்கும் முலைச்செவ்வாய்
வெள்ளைந் நகையார் நடஞ்செய் விடைவாயே.   6

4154. பாதத் தொலிபா ரிடம்பாட நடஞ்செய்
  நாதத் தொலியர் நவிலும் இடமென்பர்
கீதத் தொலியுங் கெழுமும் முழவோடு
வேதத் தொலியும் பயிலும் விடைவாயே.        7

4155. எண்ணா தஅரக் கனுரத் தைநெரித்துப்
  பண்ணார் தருபா டலுகந் தவர்பற்றாங்
கண்ணார் விழவிற் கடிவீ திகள்தோறும்
விண்ணோர் களும்வந் திறைஞ்சும் விடைவாயே. 8


கொடிகள் வானவரை அழைப்பது போலசையும் திருவிடைவாய் என்பர்.

     6. பொ-ரை: சிவபெருமானை விலக்கி, பார்வதிதேவியை இகழ்ந்த,
தக்கனது தலையைக் கொய்து, பின் அருள் செய்த பெருமானது இடம்,
வள்ளிக் கொடி போன்ற இடையையும், நெருங்கிய தனபாரங்களையும்,
சிவந்த வாயையும், வெள்ளிய பற்களையும் உடைய, மகளிர் நடஞ்செய்யும்,
திருவிடைவாய் என்பர்.

     7. பொ-ரை: திருவடிப்புகழைப் பூதகணங்கள் பாட, தான் நடனம்
செய்யும் ஒளிவடிவாய நாத தத்துவத்தினிடமாகத் திகழும் சிவபெருமானது
இடம், இசைப்பாடல்களின் ஒலியும், முழவொலியும் வேதஒலியும் நிறைந்த,
திருவிடைவாய் என்பர்.

     8. பொ-ரை: தம்மை மதியாத இராவணனது வலிமையைக் கெடுத்து,
பின் அவன் பண்ணோடு யாழிசை கூட்டிப் பாடிய பாடல் கேட்டு உகந்த
சிவபெருமானது இடம், இடமகன்ற வீதிகள் தோறும் திருவிழாக் காலங்களில்
விண்ணவர்களும் வந்திறைஞ்சும் சிறப்பினதாகிய திருவிடைவாய் என்பர்.