4156. |
புள்வாய்
பிளந்தான் அயன்பூ முடிபாதம் |
|
ஒள்வான்
நிலந்தே டும்ஒரு வர்க்கிடமாந்
தெள்வார் புனற்செங் கழுநீர் முகைதன்னில்
விள்வாய் நறவுண் டுவண்டார் விடைவாயே. 9 |
4157. |
உடைஏ
துமிலார் துவராடை யுடுப்போர் |
|
கிடையா
நெறியான் கெழுமும் இடமென்பர்
அடையார் புரம்வே வமூவர்க் கருள்செய்த
விடையார் கொடியான் அழகார் விடைவாயே. 10 |
4158.
|
ஆறும்
மதியும் பொதிவே ணியானூரா |
|
மாறில்
பெருஞ்செல் வம்மலி விடைவாயை
நாறும் பொழிற்கா ழியர்ஞா னசம்பந்தன்
கூறுந் தமிழ்வல் லவர்குற் றமற்றோரே. 11 |
திருச்சிற்றம்பலம்
9.
பொ-ரை: திருமால் பிரமன் ஆகியோர், அடியையும் முடியையும்
நிலத்திலும் வானத்திலும் சென்று தேடுமாறு, உயர்ந்து நின்ற ஒப்பற்ற
சிவபெருமானுக்குரிய இடம், தெளிந்த நீரோடைகளில் பூத்த செங்கழுநீர்
மலர்களில் உள்ள தேனை, வாய்திறந்து உண்டு வண்டுகள் பாடும்
திருவிடைவாய் என்பர்.
10.
பொ-ரை: ஆடையின்றியும் துவராடை உடுத்தும் திரியும் சமண
புத்தர்களால் அறிய முடியாத, மேலான சைவநெறிக்குரிய அப்பெருமான்
விரும்பி உறையும் இடம், வானில் இயங்கிய திரிபுரங்களை அழித்து
அவற்றின் தலைவர்களாய மூன்று அசுரர்ளுக்கு அருள் செய்த விடைக் கொடியுடையவனாகிய சிவபெருமானது
அழகிய திருவிடைவாய் என்பர்.
11.
பொ-ரை: கங்கை, பிறை ஆகியவற்றைச் சூடிய சடைமுடியை
உடைய சிவபெருமானது ஊராகிய செல்வம் நிறைந்த திருவிடைவாயை,
பொழில் சூழ்ந்த காழியில் தோன்றிய ஞானசம்பந்தன் போற்றிப் பரவிய
இத்தமிழ் மாலையை ஓதி வழிபட வல்லவர் குற்றமற்றவராவர்.
திருஞானசம்பந்த
சுவாமிகள் தேவாரம் முற்றிற்று.
|