பிறவிக்
கடலினின்றும் கரையேறும் ஆர்வமுள்ள முத்தான்மாக்களைப்
பெருமானுடைய அருளாகிய இடதுபாதம் எடுக்கிறது.
பெருமானுடைய
இடது கீழ்க் கரமாகிய வரதகரம் அருள்
வெள்ளத்திலே அமுக்கி பேரானந்தம் உறச் செய்கிறது. இதனால் வரதம்
என்பதே சிறந்த பாடம். பரதம் என்பது பாடம் அன்று. வரதம் - அருளல்.
இரு
பேரரசர்கள்:
சைவ
உலகில் இரண்டு இராஜாக்கள் உள்ளனர். ஒருவர் நரடாஜா,
மற்றொருவர் தியாகராஜா.
நடராஜாவே
ஊன நடனம், ஞான நடனம் என்னும் இரு நடனமும்
செய்தபோதிலும், ஞான நடனத்தைப் புலப்படுத்தவே, தியாகராஜாவாகத்
திருவாரூரில் எழுந்தருளினார். அவர் அமரர் நாட்டிலிருந்த ஜஸ்வர்யங்களை
எல்லாம் உதறி, ஆரூர் நுண் மணலையே இடமாகக் கொண்டு
தியாகராஜாவாகத் திருவாரூரிலே வீற்றிருக்கிறார்.
நடராஜப்
பெருமான் செய்யும் நடனம் ஆனந்த நடனம். தியாகராஜா
செய்யும் நடனம் அசபா நடனம். இது மூச்சுக் காற்றால் நிகழ்வது.
நடராஜர்
நின்று ஆடுகிறார். இவர் இருந்து ஆடுகிறார்.
நடராஜர்
நடனம் போக நடனம், போகம் என்பது இன்ப துன்ப
அனுபவம். தியாகராஜர் நடனம் யோக நடனம். யோகம் என்பது துன்பக்
கலப்பில்லா இன்ப அநுபவம்.
அவர்
நடனம் பிறவியைத் தொடுவது. இவர் நடனம் பிறவியை
விடுவது.
எனவேதான்
நடராஜப் பெருமானை, ஐந்து பேரறிவும் கண்களே
கொள்ள, அளப்பரும் கரணங்கள் நான்கும் சிந்தையேயாக, குணம் ஒரு
மூன்றும் திருந்து சாத்துவிகமேயாக, இந்துவாழ் சடையான் ஆடும் ஆனந்த
எல்லையில், தனிப்பெருங்கூத்தின், வந்த பேரின்ப வெள்ளத்துள், திளைத்து,
மாறிலா மகிழ்ச்சியில் மலர்ந்த சுந்தரரை
|