பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானத்தின் ஆசியுரை37

என்பதைத் தெளிகின்றோம். எனவே, பொருள் புரியாமல் பண் மாற்றிப்
பாடுதலைத் தவிர்ப்போமாக.

கல்லூர்ப் பெருமணம் வேண்டா:

     அம்மி மிதித்து அருந்ததி காட்டும் திருமணம் வேண்டா, ஏனெனில்
கழுமலம் முதலாகப் பல்லூர்களிலும் நான் பாடிய பாடல்கள்
மெய்யாகமாட்டா. நான் இதுவரை சொல்லிய பாடல் கருத்துக்களைத்
தொண்டர்கள் ஏற்கவும் மாட்டார்கள். நல்லூர்ப் பெருமணத்தில்
எழுந்தருளியிருக்கும் பெருமானே, இவ்வேண்டுகோளை ஏற்று எனக்குப்
பெருமணத்தைக் கொடுத்தருள்க (முத்தி) என்பது “கல்லூர்ப் பெருமணம்”
என்ற பாடலின் கருத்தாம்.

     “அவ்வினைக் கிவ்வினை” என்ற திருநீலகண்டத் (தி.1 ப.116)
திருப்பதிகத்துள் 3ஆம் பாடலில், ‘முலைத்தடம் மூழ்கிய போகங்களும்
மற்றெவையும் எல்லாம், விலைத்தலையாவண்ணம் கொண்டு எமையாண்ட
விரிசடையீர்” என்ற சொல்மலருக்கு, இத்திருமணம் மாறுபாடாக அமைகிறது.
எனவே தொண்டர்கள் என்சொல்லை மெய்யாகக் கொள்ளார்கள். ஆதலால்
“கல்லூர்ப் பெருமணம் வேண்டா” என்றருளினார்.

     மேலும், எனக்கு இவ்வுலக போகங்களில் விருப்பமும் இயல்பாகவே
இல்லை. எனவே என்னை இணையார் திருவடியில் ஏற்றருள்க என்கிறார்.

     “கல்லூர்ப் பெருமணம்” என்ற இப்பதிக இறுதிப் பாடலில்
இப்பதிகத்தை ஓதுவார்க்கு “அறும்பழி, பாவம், அவலம் இலரே”
என்றதனாலும் இதனை வலியுறுத்தினார். அவலம் இலர்-எனவே
பிறவித்துன்பம் இலராவர். வீடு பெறுவர் என்ற குறிப்பும் காணப்படுகிறது.
எனவே ஞானசம்பந்தர்-‘திருமணம் வேண்டாம்-பெருமணம் வேண்டும்,
என்று வேண்டிப் பெற்றார் ஆயிற்று.

தொண்டு செய்வார் துன்புறார்:

     ஞானசம்பந்தர் நிறைவாகப் பாடிய ‘கல்லூர்ப் பெருமணம்’ என்ற
பதிகத்தின் மூன்றாம் பாடலின் கருத்தை நோக்குக. நன்மை எல்லாம்
பொருந்தியுள்ள நல்லூர்ப் பெருமணத்தில் பொருந்தி நின்று இன்புறும்
எந்தை ஆச்சாள்புரம் சிவலோகத் தியாகராசர், அவரது