பக்கம் எண் :

374தலங்களின் வரலாற்றுக் குறிப்புகள் 

83. திருவைகல்மாடக்கோயில்

     வைகல் என்னும் ஊரில் மாடக்கோயில் அமைப்பில் அமைந்த
காரணத்தால் இப்பெயர் பெயர் பெற்றுள்ளது. இக்கோயில் ஊரின் மேல்
பக்கத்தில் இருக்கிறது. இது கோச்செங்கட்சோழனால் கட்டப்பெற்ற
பழமையும் பெருமையும் வாய்ந்தது. இச்செய்தி “வையகம் மகிழ்தர வைகன்
மேற்றிசைச், செய்யகண் வளவன் முன்செய்த கோயிலே” என்னும் இத்தலத்து
ஞானசம்பந்தர் பதிகத்து இரண்டாம் பாடலின் அடிகளால் விளங்குகின்றது.

     இது மயிலாடுதுறை - கும்பகோணம் இருப்புப் பாதையில் ஆடுதுறை
தொடர்வண்டி நிலையத்திற்குத் தெற்கே 5 கி.மீ. தூரத்தில் இருக்கிறது.
காவிரித் தென்கரைத் தலங்களுள் இது முப்பத்து மூன்றாவது ஆகும்.
இறைவரின் திருப்பெயர் வைகல்நாதேசுவரர். இறைவியின் திருப்பெயர்
கொம்பியல்கோதை. இதற்கு ஞானசம்பந்தர் பாடிய பதிகம் ஒன்று
இருக்கின்றது.

84. திருவைகாவூர்

     இது கும்பகோணத்திற்கு வடமேற்கே சுமார் 10 கி.மீ, தூரத்திலுள்ள
திருப்புறம்பயத்திற்கு மேற்கே 5 கி.மீ. தூரத்தில் கொள்ளிடப்பேராற்றின்
தென்கரையில் இருக்கிறது.

     இறைவரின் திருப்பெயர் வில்வவனேசுவரர். இறைவியின் திருப்பெயர்
வளைக்கைநாயகியம்மை. மரம் வில்வம். தீர்த்தம் எமதீர்த்தம். இது
சிவராத்திரிக்கு விசேடமான தலம். வேடன் ஒருவன் சிவராத்தியில் புலிக்குப்
பயந்து வில்வமரத்தில் ஏறி, தூக்கம் வாராமையால் வில்வ இலையைப்
பறித்துச் சிவபெருமான் மீது இட்டு முத்தியடைந்த தலம். இதற்கு
ஞானசம்பந்தர் பதிகம் ஒன்று இருக்கின்றது. சம்புவராய மன்னர்களில்
சகலபுவனசக்கரவர்த்தி இராச நாராயணசம்புவராயர் காலத்திலும்
பொறிக்கப்பெற்ற கல்வெட்டுக்கள் இருக்கின்றன.

85. திருவிடைவாய்

     தேவாரத் திருப்பதிகங்கள் பெற்ற தலங்கள் 274 என இதுவரை
கணக்கிடப்பெற்றிருந்தது. கி.பி. 1917 ஆம் ஆண்டு