பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)தலங்களின் வரலாற்றுக் குறிப்புகள்375

கல்வெட்டு ஆராய்ச்சியில் திருஞானசம்பந்தர் திருப்பதிகம் பிறிதொரு தலம்
உள்ளதெனக் கண்டு பிடிக்கப்பட்டது. அத்தலம்தான் திருவிடைவாய். இது
இடவை என மருவியும் வழங்குகிறது. அப்பர் தேவாரத்தில் இடம்பெற்ற
வைப்புத்தலமாகக் கருதப்பெற்று வந்த திருவிடைவாய், திருப்பதிகம் பெற்ற
தலமாகவும் விளங்கத் தொடங்கியது.

     தஞ்சை மாவட்டம் கொரடாச்சேரி வெண்ணாற்றங்கரையில் இத்தலம்
உள்ளது. கொரடாச்சேரியிலிருந்து கூத்தாநல்லூர் செல்லும் வழியில்
வெண்ணை வாயில் என வழங்கும் வெண்ணாற்றுப் பாலத்திற்கு அருகில்
திருவிடைவாய் செல்லும் வழி என்னும் கைகாட்டி வழியே கிழக்கில் 1.5 கி.மீ.
சென்றால் இத்தலத்தை அடையலாம்.

     கிழக்கு நோக்கிய சந்நிதி. அழகிய சிறிய திருக்கோயில். புதிய
திருப்பணி. ஒரே பிரகாரம் மட்டும் உள்ளது. கட்டைக் கோபுர வாயிலைக்
கடந்து உள்ளே சென்றால் நந்தி பலிபீடங்கள். கன்னிமூலையில் விநாயகர்.
வாயுமூலையில் முருகன் கஜலக்ஷ்மி சந்நிதிகள், கிழக்கே ஐயனார்,
நவக்கிரகங்கள், வைரவர், சந்திரசூரியர் உள்ளனர். தெற்குப் பரிகாரத்தில்
மண்டபச் சுவரில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட இத்தலத் திருப்பதிகக்
கல்வெட்டைக் காணலாம். அடுத்து நர்த்தன விநாயகர், தக்ஷிணாமூர்த்தி
விளங்குகின்றனர். மேற்கே இலிங்ககோத்பவர், வடக்கே பிர்மா துர்க்கை
தனிக்கோயில், சண்டேசுரர் உள்ளனர்.

     மகாமண்டபம் அம்பாள் கோயிலை இணைத்துள்ளது. நால்வர்
சந்நிதியில் தலத் திருப்பதிகக் கல்வெட்டு உள்ளது. அம்பாள் தெற்கு நோக்கி
உள்ளார். சுவாமி கருவறையில் விளங்குகிறார். இறைவன் திருப்பெயர்
அருள்மிகு புண்ணியகோடிநாதர். இடைவாய்நாதர் எனத் தமிழில் வழங்கப்
பெறுகிறார். அம்பாள் திருப்பெயர் அருள்மிகு அபிராமியம்மை. தீர்த்தம்
புண்ணியகோடி தீர்த்தம். தலமரம் வில்வம். ஐயடிகள் காடவர்கோன்
நாயனார் அருளிய க்ஷேத்திரக் கோவை வெண்பா ஒன்றும்
இத்தலத்திற்குள்ளது. பொது

     திருப்பாசுரம் பொது. இது திருமதுரைக்கு உரியது.