என்று எடுத்தே அடியவருக்கு
எளியானை, அவர் தம் சிந்தை பிரியாத
பெரிய திருத்தாண்டகச் செந்தமிழ்பாடிப் பிறங்குசோதி விரியாநின்று
எவ்வுலகும் விளங்கிய பொன்னம்பலத்துமேவி ஆடல் புரியா நின்றவர்
தம்மைப் பணிந்து தமிழாற்பின்னும் போற்றல் செய்வார் (பெரியபுராணம்
திருநாவு. பா-175) என்பவற்றால் சிந்தையும் சிவபிரானும் பிரியா வினைக்கு
முதலாதல் விளங்கும்.
நின்று
சபையில் ஆனந்த நிர்த்தமிடுவோர்க்கு ஆளாயின்
வென்ற பொறியார்க்கு ஆனந்த வெள்ளம் பெருக வுய்ப்பர்
(பேரூர்ப் புராணம்.
நாவலன் வழிபடு படலம். பா -23) என்னும்
உண்மையைத் தெளிவிக்க ஆடினாய் என்றெடுத்தார். ஆடினாய்
நறுநெய்யொடு பால் பாதமலர் சூடுகின்றிலை சூட்டுகின்றதுமிலை என்னுந்
திருவாசத்தில் (பா.35) பாதமலர் என்னும் தொடர் இயைவதுபோல மீளவும்
நெய், பால், தயிர் ஆடினாய் என்று இயைவது உணர்க.
சிவ
வழிபாட்டிற்கு, கூறப்படும் உபசாரங்கள் பலவற்றினும்,
அபிடேகமே சிறந்தது ஆதலின், அதனை எடுத்துக் கூறினார். அதனை,
சிவதருமம் பல. அவற்றுட் சிறந்தது பூசனை. அதனுள், அவமில் பல
உபசாரத்தைந்து சிறந்தன. ஆங்கவை தாம் அபிடேகம் அரிய விரை,
விளக்கு, மனுத்தாங்கும் அருச்சனை, நிவேதனம் ஆகும் என்னும் கச்சியப்ப
முனிவர் வாக்கால் அறிக. (பேரூர்ப் புராணம் மருதவரைப் படலம். 29)
தேன், நெய், பால், தயிர் ஆட்டுகந்தானே முதலியவற்றையும் நோக்குக.
அந்தணர்-தில்லைவாழந்தணர். எவ்வுயிர்க்கும் கருணைக் கடலென்பார்,
வேதியர் மறையோர் என்னாது அந்தணர் என்று அருளினார்.
மெய்ஞ்ஞானிகள், அவனருளே கண்ணாகக் கண்டு திளைக்க,
ஆனந்தக்கூத்தாடும் பரஞானவெளி ஆதலின், ஊன் அடைந்த உடம்பின்
பிறவி, தான் அடைந்த உறுதியைச்சார, ஆதியும் நடுவும் முடிவும் இல்லாத
அற்புதத் தனிக் கூத்தாடும் இடம் சிதம்பரம், ஞானாகாசம் எனப்பெற்றது.
சிற்பரவியோமம் ஆகும் திருச்சிற்றம்பலத்துள் நின்று பொற்புடன் நடஞ்
செய்கின்ற பூங்கழல் போற்றி போற்றி என்றருளிய சேக்கிழார்
திருவாக்கினாலும் (பெரிய புராணம் தில்லைவாழ் அந்தணர் பா.2) உணர்க.
நறும்-நறுமணம்
உள்ள, கொன்றை-மந்திரங்களிற் சிறந்ததாகிய
பிரணவ மந்திரத்துக்குரிய தெய்வம், தாமே எனத்தெளியச் செய்ய,
கொன்றைமாலையணிந்தனர். அம்மலர், உருவிலும் பிரணவ வடிவாயிருத்தலின்
பிரணவபுட்பம் எனப்படும். துன்றுவார்
|