பக்கம் எண் :

390திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

2802. கொட்ட மேகம ழும்குழ லாளொடு
  கூடி னாய்எரு தேறி னாய்நுதற்
     பட்ட மேபுனை வாய்இசை பாடுவ பாரிடமா
நட்ட மேநவில் வாய்மறை யோர்தில்லை
     நல்ல வர்பிரி யாதசிற் றம்பலம்
இட்ட மாஉறை வாய்இவை மேவிய தென்னைகொலோ.   2

பொழில் தோணிபுரவர்தம், கொன்றைசூடும் குறிப்பது வாகுமே”
(தி.5ப.45பா.7) என்னும் திருக்குறுந்தொகையாலும் “ஓரெழுத்திற்குரிய பொருள்
உயர்நெடு மாலயன் என்பார் நீரெழுத்து நிகர் மொழி நின்னில விதழிமுன்
என்னாம்” என்னும் வாட்போக்கிக் கலம்பகப் பாட்டாலும் அறிக. பனிகால்
கதிர் - குளிர்ச்சியை வீசும் ஒளியையுடைய, வெண் திங்கள் சூடினாய்
என்றது, “உற்றார் இலாதார்க் குறுதுணையாவன” சிவபிரான் திருவடியே
என்பதைக் குறிக்கும். தொல்வினை என்றது சஞ்சித கருமத்தை. பல்சடை -
பூணூல் அபரஞானத்தையும், சடை பரஞானத்தையும் குறிக்கும் என்ப.
அதனாலும், சிவசின்னங்களில் சடையே சிறந்ததாயிருத்தல் புகழ்ச் சோழ
நாயனார் வரலாற்றாலும், விடந்தீர்க்க வேண்டித் திருமருகற் பெருமானை
இரத்தற்கண் “சடை யாய் எனுமால்” என்றெடுத் தருளினமையானும்
அறியப்படும்.

     2. பொ-ரை: நறுமணம் கமழும் கூந்தலை உடைய சிவகாமி
அம்மையாரொடு கூடியவனே, விடையேறியவனே, நெற்றிப்பட்டம்
அணிந்தவனே, பூதகணங்கள் இசைபாடுவனவாகத் திருக்கூத்தாடுவோனே,
(அறிதற்கரிய) வேதங்களை ஓர்கின்ற தில்லையில் வாழும் நல்லவராய
அந்தணர் பிரியாத திருச்சிற்றம்பலத்தே விருப்பொடு வாழ்பவனே!
இவ்வைந்து கருணைச் செயல்களையும் மேவியது யாது காரணம் பற்றியோ?
கூறியருள்க.

     கு-ரை: பாரிடம் - பூதம், நட்டம் - நடனம்,நவிலுதல் - பழகுதல்.
‘நட்டம் பயின்றாடும் நாதனே’ மறையோர் - வேதங்களை ஓர்கின்ற.
ஓர்நல்லவர் - மறையோராகிய நல்லவர் எனலுமாம்: நல்லவர், சரியை கிரியா
யோகங்களைச் செய்து பெறும் நன்னெறியாகிய ஞானத்தைப் பெற்றவர்.
கொட்டம்- நறுமணம் “கொட்டமே கமழுங் கொள்ளம்