பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)01. கோயில்391

2803. நீலத் தார்கரி யமிடற் றார்நல்ல
       நெற்றி மேல்உற்ற கண்ணி னார்பற்று
சூலத் தார்சுட லைப்பொடி நீறணி வார்சடையார்
சீலத் தார்தொழு தேத்துசிற் றம்பலம்
     சேர்த லால்கழற் சேவடி கைதொழக்
கோலத் தாய்அரு ளாய்உன காரணம்கூறுதுமே.   3


பூதூர்” எனப்பின்னும் வருதல் காண்க. நுதற்பட்டம் நெற்றியில் அணியும்
ஓர் அணி. “பட்டநெற்றியர் நட்டமாடுவர்”. வீரர் அணிவது
“நுதலணியோடையிற் பிறங்கும் வீரப்பட்டிகை” என்பதாலறிக. இசை பாடுவ
- பாரிடம் ஆ(க) - பாரிடம் இசைபாடுவன ஆக. பாரிடம் - பூதங்கள்.
நட்டம் நவில்வாய் - திருக்கூத்தாடியருள்வீர். “ஆளும் பூதங்கள்
பாடநின்றாடும் அங்கணன் என வன்றொண்டப் பெருந்தகையார் அருளிச்
செயலும் காண்க. நல்லவர் - நல்லொழுக்கின் தலைநின்றவராகிய
தில்லைவாழந்தணர். நன்னெறியாகிய ஞானத்தையுடையாருமாம். இவை
மேவியது என்னைகொலோ? - என்று வினவுகின்றார், அவை பெண்
விருப்புடையான் போற் பெண்ணோடு கூடியிருத்தலும், ஊர்தியாக
ஏறுஏறுதலும், அணிவிருப்புடையான் போல் நெற்றிப்பட்டம் அணிந்தமையும்,
கண்டார் அஞ்சத்தக்க பூதங்களோடு கூடியாடுதலும், உலகில் எத்தனையோ
தலங்களிருக்கத், தில்லைச் சிற்றம்பலத்தை இட்டமாக விரும்பியதும் அறிக.

     3. பொ-ரை: நீலநிறத்தைப் பொருந்திய கரிய திருக்கழுத்தினர்
(திருநீலகண்டர்). அழகிய நெற்றிக்கண்ணினர். திரிசூலம் பற்றியவர்,
காடுடைய சுடலைப் பொடிபூசியவர், சடையினர், சீலம் மிக்கவர் ஆகிய
தில்லைவாழந்தணர் வணங்கியேத்தும் திருச்சிற்றம்பலத்தை இடைவிடாது
நினைந்து சேர்தலால். திருக்கோலம் உடைய நடராசப் பெருமானே! நின்
கழலணிந்த சேவடியைக் கையால் தொழ அருள் செய்தாய். உன்னுடைய
காரணங்களை (முதன்மையை)க் கூறுவேம்.

     கு-ரை: இத்திருப்பாடல், தில்லைக்குச் செல்லுங்கால், திருஞான
சம்பந்த சுவாமிகளுக்கு எதிர்வந்து தில்லைவாழந்தணர்கள்
சிவகணநாதர்களாகத் தோற்றம் அளித்த உண்மையை உணர்த்திற்று. நீலத்து
- நீலமணியைப்போல், ஆர் - பொருந்திய, கரிய - கருமையையுடைய. நீலம்,
கறுப்பு, பச்சை இவற்றுள் ஒன்றைப் பிறிது ஒன்றாகக் கூறும் வழக்கு
உண்மையை “பச்சைப் பசுங்கொண்டலே”