2804. |
கொம்ப
லைத்தழ கெய்திய நுண்ணிடைக் |
|
கோல வாள்மதி போலமு கத்திரண்
டம்ப லைத்தகண் ணாள்முலை மேவிய வார்சடையான்
கம்ப லைத்தெழு காமுறு காளையர்
காத லால்கழற் சேவடி கைதொழ
அம்பலத்துறை வான்அடி யார்க்கடையாவினையே. 4 |
(மீனாட்சியம்மை
பிள்ளைத்தமிழ். பா.1) என்று வருவதாலும் அறிக. மிடற்றார்
- கண்டத்தையுடையவர், பற்று சூலத்தார் - கையில் சூலம் பற்றியவர்,
சேர்தலால் பற்றுக்கோடாக, நாங்கள் சேர்ந்தமையாலும், உன காரணம்
கூறுதும் - எல்லாவற்றிற்கும் நீயே காரணனாம் தன்மைகளைக்கூறுவோம்.
கோலத்தாய் அருளாய் - அழகையுடையவனே, உன் சிவந்த
திருவடிமலர்களைத்தொழ எமக்கு அருள்வாயாக. சேவடி(யைத்) தொழ
அருளாய் எனக் கூட்டுக. அவனருளாலே அவன் தாள்வணங்கி என்றல்
கருத்து. நீலகண்டம், முக்கண், சூலம், திருநீற்றுப் பூச்சு, வார்சடை
இக்கோலத்தோடும் தில்லைவாழந்தணரைத் தாம் கண்டமை குறித்தருள்கிறார்.
இதனைச் சேக்கிழார் பெருமான் நீடும் திருத்தில்லை யந்தணர்கள் நீள்
மன்றுள் ஆடும் கழற்கு அணுக்க ராம்பேறு அதிசயிப்பார் (பெரிய. திருஞா.
பா-168) என்று தொடங்குவது முதலிய பாடல்களில் குறித்தருள்வது காண்க.
4.
பொ-ரை: பூங்கொம்பு தனக்கு இணையாகாவாறு அலையச் செய்து
அதனழகினையும் தான் பெற்ற நுண்ணிய இடையையும், அழகும் ஒளியும்
உடைய திங்கள் போலும் முகத்தில் இரண்டு அம்புகளை வருத்தி ஒப்பாகீர்
என்றொதுக்கிய திருக்கண்களையும் உடைய சிவகாமியம்மையார்
கொங்கைகளை விரும்பிய வார்சடையான், (நடராசாப் பெருமான்), அரகர
முழக்கஞ் செய்து விழுந்தெழுந்து அன்பர்கள் அன்புடன் வழிபடும்
காளையைப்போன்ற உடற்கட்டினர். பேரார்வத்தோடு திருக்கழலணிந்த
சிவந்த திருவடிகளைக் கைகளால் தொழ, பொன்னம்பலத்தில் திருக்கூத்தாடும்
முழுமுதல்வன் அடியவர்க்கு வினைத்தொடர்பு இல்லை.
கு-ரை:
கொம்பு..முலை என்றது கங்கையைக் குறித்தலுமாம்,
ஆயினும், அஃது அத்துணைச் சிறப்பினதன்று. காளையர் என்பது
வழிபடுவோருள் அத்தகையாரைக் குறித்ததெனலும் பொருந்தும்.
காளையர்க்கு முன்னும்பின்னும் உள்ள அடைமொழியால் முறையே
பெருமானது திருமேனியிற் கொண்ட ஆர்வமும் திருவடிக்கண் நின்ற
|