பக்கம் எண் :

412திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

3.திருப்புகலி

பதிக வரலாறு:

     ஞானப்பிள்ளையார் சீகாழிப் பதியில் தங்கியிருந்த காலத்தில் பாடியருளிய செந்தமிழ் மாலை விகற்பச் செய்யுள்களில் இத்திருப்பதிகமும்
ஒன்றாகும்.

                     
நாலடிமேல் வைப்பு
பண்: காந்தார பஞ்சமம்

ப.தொ.எண்: 261   பதிக எண்: 3

        திருச்சிற்றம்பலம்

2823. இயலிசை எனும்பொரு ளின்திறமாம்
       புயல்அன மிடறுடைப் புண்ணியனே
கயல்அன வரிநெடுங் கண்ணியொடும்
அயல்உல கடிதொழ அமர்ந்தவனே
      கலன்ஆவது வெண்டலை கடிபொழிற் புகலிதன்னுள்
நிலன்நாள்தொறும் இன்புற நிறைமதி அருளினனே. 1


     1. பொ-ரை: இயற்றமிழ், இசைச்தமிழ், நாடகத்தமிழ் இவற்றில்
கூறப்படும் பொருளின் பயனாக விளங்குகின்ற, கார்மேகம் போன்ற கருநிறக்
கண்டத்தையுடைய புண்ணிய மூர்த்தியே! கயல்மீன் போன்ற நீண்ட
கண்களையுடைய உமாதேவியோடு எல்லா உலகங்களும் தொழும்படி
வீற்றிருப்பவனே! உனக்கு அணிகலனாக அல்லது உண்கலனாக விளங்குவது
மண்டையோடே ஆகும். நல்ல மணமுடைய பூஞ்சோலைகள் நிறைந்த
திருப்புகலியில் வீற்றிருந்து இந்நிலவுலகத்தோர் நாடோறும் இன்புறும்படி
நிறைந்த அபர ஞான, பர ஞானங்களை அடியேனுக்கு நீ அருளிச் செய்தாய்.

     கு-ரை: இயல் இசை எனும் பொருளின் திறமாம் புண்ணியனே-
இயற்றமிழ் இசைத்தமிழ் (நாடகத்தமிழ்) என்னும் இவற்றில் கூறும் பொருளின்
பயனாகிய புண்ணிய மூர்த்தியே. புயல் அனமிடறு உடைப்
புண்ணியனே-முகில்போன்ற கரிய கழுத்தை உடைய புண்ணிய மூர்த்தியே.
கலன் ஆவது வெண்டலை-உமக்கு அணிகலமாவது நகுவெள்தலையாம்.
அத்தகைய அடிகளீரே! நிலன் நாள்தொறும் இன்புற நிறைமதி
அருளினனே-நில உலகத்தில் உள்ளார் நாடோறும்