2824. |
நிலையுறும்
இடர்நிலை யாதவண்ணம் |
|
இலையுறு
மலர்கள்கொண் டேத்துதும்யாம்
மலையினில் அரிவையை வெருவவன்றோல்
அலைவரு மதகரி யுரித்தவனே இமையோர்கள்நின்
தாள்தொழ எழில்திகழ் பொழிற்புகலி
உமையாளொடு மன்னினை உயர்திரு வடியிணையே. 2 |
இன்பமடையும்படி நிறைந்த
அபரஞான பரஞானங்களை அடியேனுக்கு
அருளிச் செய்தவராவீர். இயல் இசை எனவே உபலக்கணத்தால் நாடகத்
தமிழும் கொள்ளப் படும். கற்றல் கேட்டல் உடையார் என்புழிப்போல
முத்தமிழ் நூல்களை யறிவதின் பயன்-சிவனே பதியென்றுணர்ந்து வீடுபேறு
எய்தலாம். அல்லாத வழி அந்நூல்களை யறிவதாற் பயன் இல்லை யென்பது
கருத்து. இதனை மந்திபோல் திரிந்து ஆரியத் தொடு செந்தமிழ் பயன்
அறிகிலா அந்தகர் எனப் பிறிதோரிடத்து அருளிச் செய்தலையும் காண்க.
கலனாவது வெள்தலை யென்பதற்கு உண் கலமாவது பிரமகபாலம் என
உரைக்கினும் அமையும். அமர்ந்தவனே விளி. அமர்ந்தவனே
நிறைமதியருளினனே-அமர்ந்தவராகிய நீரே எனக்கு நிறைமதியருளினீராவீர்.
இடவழுவமைதி; இவ்வாறு கூறுவதே பின்வரும் பாசுரங்களுக்கு ஒப்பக்
கூறுவதாகும். திருஞானசம்பந்தர் பெற்ற ஞானம் உலகம் இன்புறற் பயனை
விளைத்தது. மதி-இங்கு அறிவின்மேல் நின்றது. இனி, அமர்ந்தவனே,
நிறைமதி யருளினவனே என்பதற்கு அமர்ந்தவன் எவனோ அவனே எனக்கு
நிறைமதி யருளினவனுமாவான் என்றுரைத்தலுமொன்று.
2. பொ-ரை:
ஆரவாரித்துவரும் மதயானையின் வலிய தோலினை
மலைமகளான உமாதேவி அஞ்சும்படி உரித்தவனே! அழகிய சோலைகள்
நிறைந்த திருப்புகலியில் வானவர்களும் வந்து உன்திருவடிகளைத் தொழும்
பொருட்டு உமாதேவியோடு நிலையாக வீற்றிருக்கின்றாய். எங்களால்
நீக்குவதற்கரிய நிலைத்த துன்பங்களை நீ நீக்கும் வண்ணம் இலைகளையும்,
மலர்களையும் கொண்டு உன் திருவடிகளை அர்ச்சித்து நாங்கள்
வழிபடுவோம்.
கு-ரை:
இப்பாட்டிற்கு, மதகரியுரித்தவனே ... புகலி மன்னினை
நிலையுறும் இடர் நிலையாதவண்ணம் இலையுறுமலர்கள் கொண்டு (நின்)
உயர் திருவடியிணையை ஏத்துதும் யாம்-எனப் பொருள் கோள் கொள்க.
நிலையுறும் இடர்-(நீக்க முடியாமையால்) நிலைத்
|