2825. |
பாடினை
அருமறை வரன்முறையால் |
|
ஆடினை காணமுன் அருவனத்திற்
சாடினை காலனைத் தயங்கொளிசேர்
நீடுவெண் பிறைமுடி நின்மலனே
நினையேஅடி யார்தொழ நெடுமதிற் புகலிந்நகர்
தனையேயிட மேவினை தவநெறி அருள்எமக்கே. 3 |
துள்ள துன்பங்கள்.
நிலையாத வண்ணம்-நிலையாதபடி. இலையுறும்
மலர்கள்கொண்டு-பத்திர புட்பங்களால். ஏத்துதும்-(துதித்து) வழி படுவோம்.
மலையினில் அரிவையை வெருவ-இமயமலையில் (அவ தரித்த)
உமாதேவியாரை அஞ்சுவிக்க. வல்தோல்-வலியதோலையுடைய. மதகரி-
மதங்கொண்ட யானை. வெருவ என்ற சொல்லில் பிறவினை விகுதி தொக்கது.
3.
பொ-ரை: ஒளி விளங்குகின்ற வளரும் தன்மையுடைய
வெண்பிறையைச் சடைமுடியில் சூடிய நின்மலனே! அரிய வேதங்களை
இசையிலக்கண முறைப்படி, பாடியருளினாய்! முனிவரும் அவர்களின்
பத்தினிகளும் காணும்படி அரிய தாருகாவனத்தில் திருநடனம் ஆடினாய்!
மார்க்கண்டேயன் உயிரைக் கவரவந்த காலனைக் காலால் உதைத்தாய்!
முழுமுதற்கடவுளான உன்னை அடியார்கள் தொழும்படி நீண்டமதில்கள்
சூழ்ந்த திருப்புகலிநகரில் வீற்றிருந்து அருளினாய்! எங்கட்குத் தவநெறியினை
அருள்வாயாக! சுந்தரர் இறைவனிடம் தலைவா உனை வேண்டிக்
கொள்வேன் தவநெறியே என்று வேண்டியது இங்கு நினைவு கூரத்தக்கது.
கு-ரை:
வரன்முறையால்-இசையிலக்கண முறைப்படி; பாடினை
அருமறை-அரிய வேதங்களைப் பாடியருளினீர். அருவனத்தில்-
அரியதாருகாவனத்தில். காண-(முனிவர் மகளிர்) காணும்படி, ஆடினை-
ஆடியருளினீர். பெருமான் தானே வலியச்சென்று அருள்புரிந்த இடமாதலின்
அதன் அருமைப்பாடு தோன்ற அருவனம் என்றார். காண என்ற வினைக்கு
வினை முதல் வருவித்து உரைக்கப்பட்டது. தக்கன் சாபத்தினால் உடல்
குறைந்து அருகி இருந்த பிறை. இறைவனைச் சரணம் புகுந்து வளருந்தன்மை
பெற்று அழியாதிருந்ததனால் நீடு வெண்பிறை யெனப்பட்டது.
நின்மலன்-இயல்பாகவே பாசங்களின் நீங்கியவன்-தன்னைச்சார்ந்த
ஆன்மாக்களின் மலத்தை யொழிப்பவனென்றுமாம். புகலிந்நகர்;
இசையினிமைப் பொருட்டு நகரம் மிக்கது. இடம்மேவினை-இடமாக விரும்பி
|