பக்கம் எண் :

416திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

பெருமையை நிலத்தவர் பேசின்அல்லால்
  அருமையில் அளப்பரி தாயவனே
     அரவேரிடை யாளொடும் அலைகடன் மலிபுகலிப்
பொருள்சேர்தர நாள்தொறும் புவிமிசைப் பொலிந்தவனே. 5

2828. அடையரி மாவொடு வேங்கையின்றோல்
       புடைபட அரைமிசைப் புனைந்தவனே
படையுடை நெடுமதிற் பரிசழித்த
விடையுடைக் கொடிமல்கு வேதியனே
     விகிர்தாபரமா நின்னை விண்ணவர் தொழப்புகலித்
தகுவாய்மட மாதொடுந் தாள்பணிந் தவர்தமக்கே.         6


போற்றலாமே தவிர, மற்ற எவ்வித அளவைகளாலும் ஆராய்வதற்கு
அரியவனாய் உள்ளவனே! அரவம் அன்ன இடையுடைய உமாதேவியோடு,
அலைகளையுடைய கடல்வளம் பொருந்திய திருப்புகலியிலே, இப்பூவுலகில்
நாள்தோறும் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நால்வகைப்
பொருள்களும் சேரும்படி நீ வீற்றிருந்தருளுகின்றாய்.

     கு-ரை: கருமையின் ஒளிர் கடல் நஞ்சும்-கருமையினால் ஒளிர்கின்ற
நஞ்சும், கடலில் உண்டாகிய நஞ்சும். நஞ்சம் உண்ட உரிமையின் உலகுக்கு
உயிர் அளித்து நின்றனன். பெருமை ... ஆயவனே-நிலத்தவர்,
பூமியிலுள்ளவர்கள் உன் பெருமையைப் பருப்பொருட்டாக ஒருவாறு
பேசினாற் பேசலாமே தவிர, அருமையான எவ்வித ஆராய்ச்சித்
திறத்தினாலும் அளந்தறியப்படாதவனே. அருமையில்-சிறப்புஉம்மை
விகாரத்தால் தொக்கது. அரவு ஏர் இடையாள்-பாம்புபோன்ற இடையை
யுடைய உமாதேவியார். கடல்மலிபுகலி-கடல்வளம் நாடோறும் மிகுந்த
திருப்புகலியின் கண். புவிமிசைப் பொருள் சேர்தரப் பொலிந்தவனே-இப்
பூமியின் கண் நாள்தோறும் அறம்பொருள் இன்பம் வீடு என்னும் நால்வகைப்
பொருள்களும் சேரும்படி பொலிந்தவனே.

     6. பொ-ரை: சிங்கத்தின் தோலைப் போர்த்து, புலியின் தோலையும்
உடம்பில் பொருந்துமாறு இடையில் அணிந்துள்ளவனே! படைக்கருவிகளைக்
கொண்ட நீண்ட மதில்களையுடைய திரிபுரத்தின் வலிமையை அழித்தவனே!
இடபக் கொடியுடைய வேத நாயகனே! விகிர்தனே! எப்பொருட்கும்
மேலானவனே! விண்ணோர்களும் தொழத் திருப்புகலியிலே உமாதேவியோடு
வீற்றிருந்து உன் திரு