பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)03. திருப்புகலி417

2829. அடியவர் தொழுதெழ அமரரேத்தச்
       செடியவல் வினைபல தீர்ப்பவனே
துடியிடை அகல்அல்குல் தூமொழியைப்
பொடியணி மார்புறப் புல்கினனே
     புண்ணியா புனிதா புகர்ஏற்றினை புகலிந்நகர்
நண்ணினாய் கழல்ஏத்திட நண்ணகி லாவினையே. 7


வடிகளை வணங்கும் அனைவர்க்கும் அருள்புரிகின்றாய்.

     கு-ரை: அரிமாவோடு-சிங்கத்தின் தோலோடு, வேங்கையின் தோல்
புடைபட-பக்கம்பொருந்தும்படி, அரைமிசைப் புனைந்தவனே-இடுப்பில்
அணிந்தருளியவரே. படையுடை நெடுமதில்-சேனைகளையுடைய நெடிய
திரிபுரம். பரிசு அழித்த-திறன்களைத் தொலைத்த. விகிர்தா-வேறுபட்டவனே.
பரமா-மேலானவனே. நின்னை ... தாள் பணிந்தவர் தமக்கே-நும்மை
விண்ணவர்தொழத்தாள் பணிந்தவர்களாகிய அவர்களுக்குப் புகலியின்கண்
அம்பிகை சமேதராய்க் காட்சி கொடுக்கத்தக்கவராகி யிருப்பீர்.

     7.பொ-ரை: அடியவர்கள் தொழுதெழ, தேவர்கள் புகழ்ந்து வணங்க,
அவர்களின் துன்பம்தரும் கொடியவினைகளைத் தீர்த்தருளும் எம்
இறைவனே! உடுக்கை போன்ற இடையையும், அகன்ற அல்குலையும், தூய
மொழிகளையுமுடைய உமாதேவியைத் திருநீறு அணிந்த தன் திருமார்பில்
தழுவியவனே! புண்ணிய மூர்த்தியே! புனிதனே! இடபவாகனனே!
திருப்புகலிநகரில் வீற்றிருக்கும் பெருமானே! உன் திருவடிகளை வணங்கிப்
போற்றுபவர்களை வினைகள் வந்தடையா.

     கு-ரை: செடிய-துன்பம் தருவனவாகிய; வல்வினை-உயிர்க்கொலை.
செய்ந்நன்றி மறத்தல், சைவநிந்தனை முதலிய பெரும் பாவங்கள். துடியிடை...
தூமொழி அன்மொழித்தொகை; பன்மொழித் தொடர். தூய்மையான
மொழியையுடைய அம்பிகை. வினை நண்ணகிலா-கன்மங்கள் அடையமாட்டா.
ஆகவே இருவினை யொப்பது, மலபரிபாகம், சத்திநிபாதம் முறையே எய்திச்
சிவப்பேறு அடைவர் என்க.