2850. |
பூதம்
சூழப் பொலிந்தவன் பூந்தராய் |
|
நாதன் சேவடி நாளும் நவின்றிட
நல்கும் நாள்தொறும் இன்பம் நளிர்புனல்
பில்கு வார்சடைப் பிஞ்ஞ கனே. 6 |
2851. |
புற்றின்
நாகம் அணிந்தவன் பூந்தராய் |
|
பற்றிவாழும் பரமனைப் பாடிடப்
பாவம் ஆயின தீரப் பணித்திடுஞ்
சேவ தேறிய செல்வன் தானே. 7 |
பெருமான் ஒருவனே நமக்கு
உற்ற துணையாவன் என அவாய்நிலை
வருவிக்க.
6. பொ-ரை: திருப்பூந்தராய் என்னும்
தலத்தில் பூதகணங்கள் சூழ
விளங்கும் தலைவனாகிய சிவபெருமானின் திருவடிகளை எந்நாளும் போற்றி
வணங்க, குளிர்ந்த கங்கைநீர் சொட்டுகின்ற நீண்ட சடைமுடியுடைய
அப்பெருமான் நமக்கு நாள்தோறும் பேரின்பம் அருளுவான்.
கு-ரை:
நளிர்புனல் பில்குவார் சடைப்பிஞ்ஞகன் - குளிர்ந்த கங்கை
நீர் சொட்டும் நெடிய சடையில் மயிற்பீலியை யணிந்தவனாகிய சிவபெருமான்.
7.
பொ-ரை: புற்றில் வாழும் பாம்பை ஆபரணமாக அணிந்து,
திருப்பூந்தராய் என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ள, அனைவருக்கும்
மேலான கடவுளான சிவபெருமானைப் பாடி வணங்க, விடையேறும்
செல்வனான அவன், நாம் மனம், வாக்கு, காயத்தால் செய்த
பாவங்களனைத்தையும் தீர்த்தருளுவான்.
கு-ரை:
சே அது ஏறிய செல்வன் - விடையேறிய சிவபெருமான்.
பரமனைப்பாட - பரமனாகிய தன்னை நாம்பாட. பாவமாயின் தீரப்பணித்
திடும் - நம்மைப் பற்றியிருக்கும் பாவங்களானவை பற்று விட்டொழிய
ஆணைத்தருவான்; அது பகுதிப் பொருள் விகுதி. பரமன் - "யாவர்க்கும்
மேலாம் அளவிலாச் சீருடையான்" (திருவாசகம்). தீரதல் - பற்றுவிடல்.
தீர்தலும் தீர்த்தலும் விடற்பொருட்டாகும். (தொல்.சொல்.318)
|