2852. |
போத
கத்தூரி போர்த்தவன் பூந்தராய் |
|
காத லித்தான் கழல்விரல் ஒன்றினால்
அரக்கன் ஆற்றல் அழித்தவ னுக்கருள்
பெருக்கி நின்றஎம் பிஞ்ஞ கனே. 8 |
2853. |
மத்தம்
ஆனஇருவர் மருவொணா |
|
அத்தன் ஆனவன் மேவிய பூந்தராய்
ஆளதாக அடைந்துய்ம்மின் நும்வினை
மாளு மாறருள் செய்யுந் தானே. 9 |
2854. |
பொருத்த
மில்சமண் சாக்கியக் பொய்கடிந் |
|
திருத்தல் செய்தபிரான் இமை யோர்தொழப் |
8.
பொ-ரை: யானையின் தோலை உரித்துப் போர்த்தித்
திருப்பூந்தராய் என்னும் தலத்தில் விரும்பி எழுந்தருளியுள்ள எனது
பிஞ்ஞகனாகிய சிவபெருமானே தனது திருவடி விரல் ஒன்றினால் அரக்கனது
ஆற்றலை அழித்துப் பின்னர் அவனுக்கு அருள் செய்தான்.
கு-ரை:
போதகம் - யானை. பூந்தராய் காதலித்தான் -
திருப்பூந்தராயை இருப்பிடமாக விரும்பினவன். அரக்கன் ஆற்றல் அழித்து
அவனுக்கே மீள அருளும் பெருக்கி நின்ற கடவுளே பூந்தராய்
காதலித்தவன்.
9.
பொ-ரை: தாமே தலைவர் என்று செருக்குக் கொண்ட திருமாலும்,
பிரமனும், அறிந்து அடைய முடியாது உயர்ந்து விளங்கிய சிவபெருமான்
எழுந்தருளிய திருப்பூந்தராய் என்னும் தலத்தை அவனுக்கு ஆட்படும்படி
அடியவராய்ச் சென்று சேர்ந்து மேல் நிலையை அடையுங்கள. அவன் தானே
வந்து உங்கள் வினைகள் அழியுமாறு அருள்புரிவான்.
கு-ரை:
மத்தம் - மயக்கம்; செருக்கு. இருவர் - தொகைக் குறிப்பு.
நீங்கள் ஆள்(அது) ஆக அடையுங்கள். அவன்தானே வந்து உம்மைத்
தலையளித்து உம்வினை மாளுமாறு அருள்செய்யும்.
10, பொ-ரை: வேத நெறிகட்குப் பொருந்தாத
சமணர், புத்தர்களின்
பொய்யுரைகளை ஒதுக்கி, விண்ணோர்கள் வணங்கும்படி
|