பக்கம் எண் :

442திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

     செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
       நல்கு மாறருள் நம்பனே. 6

2862. ஆறு வந்தணை யுங்கொள்ளம் பூதூர்
  ஏறு தாங்கிய இறைவனை யுள்கச்
     செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
     நல்கு மாறருள் நம்பனே. 7

2863. குரக்கி னம்பயி லுங்கொள்ளம் பூதூர்
  அரக்க னைச்செற்ற ஆதியை யுள்கச்
     செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
     நல்கு மாறருள் நம்பனே. 8


தலத்தினை அடையும்படி ஆற்றைக் கடக்கத் தானாகவே தள்ளப்படுவதாக.
நம்பனே! மனத்தால் உன்னைச் சிந்தித்து மகிழும் அடியவர்கள் புறத்தேயும்
உன்னைத் திருக்கோயிலில் கண்டு வழிபட அருள்புரிவாயாக.

     கு-ரை: பதிகம் முற்றுப்பெறு முன்னமே ஓடம் கொள்ளம்
பூதூரையடைந்து விட்டதாதலால் ‘ஓடம் வந்தணையும் கொள்ளம் பூதூர்’
என்று அருளினார்.

     7. பொ-ரை: ஆறு வந்தடைகின்ற திருக்கொள்ளம்பூதூரில் இடபம்
தாங்கிய இறைவனைத் தியானிக்க ஓடம் தானாகவே தள்ளப்படுவதாக.
நம்பனே! மனத்தால் உன்னைச் சிந்தித்து மகிழும் அடியவர்கள் புறத்தேயும்
உன்னைத் திருக்கோயிலில் கண்டு வழிபட அருள்புரிவாயாக.

     கு-ரை: ஆறுவந்தணையும் கொள்ளம் பூதூர் என்று பாடப்பட்டது.
இவ்வாறே மயிலாப்பூரில் அங்கம் பூம்பாவையானபோது பதிகம் முற்றுப்
பெறுமுன்னமே பூம்பாவை வெளிப்பட்டமையையும் அறிக. (பெரியபுராணம்.)

     8. பொ-ரை: குரங்குக் கூட்டங்கள் மரங்களில் ஆடிக் குதிப்பதால்
உண்டாகும் ஒலி நிறைந்த திருக்கொள்ளம்பூதூரில் எழுந்தருளியிருக்
கின்றவனும், இராவணனை மலையின் கீழ் நெருக்கியவனுமான