பதிக
வரலாறு:
ஞானசம்பந்தர் திருப்புகலியிலிருந்து பாடியவற்றுள்
ஒன்று
இத்திருப்பதிகம்.
பண்: காந்தார பஞ்சமம்
ப.தொ.எண்: 265 |
|
பதிக
எண்: 7 |
திருச்சிற்றம்பலம்
2867. |
கண்ணுத
லானும்வெண் ணீற்றினா னுங்கழ |
|
லார்க்கவே
பண்ணிசை பாடநின் றாடினா னும்பரஞ்
சோதியும்
புண்ணிய நான்மறை யோர்களேத் தும்புக
லிந்நகர்ப்
பெண்ணினல் லாளொடும் வீற்றிருந் தபெரு
மானன்றே. 1 |
1.
பொ-ரை: நெற்றிக் கண்ணையுடையவனும், திருவெண்ணீற்றினைப்
பூசியுள்ளவனும், திருவடிகளில் கழல்கள் ஒலிக்கப்பண்ணுடன் இசைபாட
நடனம் ஆடுபவனும் ஆகி, மேலான சோதி வடிவாக விளங்குகின்ற கடவுள்,
சிவபுண்ணியர்களாகிய, நான்கு வேதங்களையும் பயின்ற அந்தணர்கள்
துதிக்கின்ற திருப்புகலி நகரில் பெண்ணின் நல்லவளாகிய உமாதேவியோடு
வீற்றிருந்தருளும் சிவபெருமானேயாவான்.
கு-ரை:
திருப்புகலியுள் பெண்ணின் நல்லவளாகிய உமாதேவியோடும்
வீற்றிருந்தருளும் பெருமானே நெற்றிக் கண்ணையுடையவனும்,
வெண்ணீற்றவனும், பண்ணிசை பாட நின்று ஆடியவனும் பரஞ்சோதியும்
ஆவான்.
|