பக்கம் எண் :

480திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

2916. பெருங்கடல் நஞ்சமு துண்டுகந் துபெருங்
       காட்டிடைத்
திருத்திள மென்முலைத் தேவிபா டந்நட
     மாடிப்போய்ப்
பொருந்தலர் தம்புர மூன்றுமெய் துபுன
     வாயிலில்
இருந்தவன் தன்கழ லேத்துவார் கட்கிடர்
      இல்லையே.                      7

2917. மனமிகு வேலனவ் வாளரக் கன்வலி
       ஒல்கிட
வனமிகு மால்வரை யால்அடர்த் தானிட
     மன்னிய


நெருப்புப் போன்று ஒளிர்கின்ற போர் செய்யப் பயன்படும்
வெண்மழுப்படையைக் கையில் ஏந்தித் திருப்புனவாயில் என்னும்
திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள சிவலோகநாதனாகிய சிவபெருமான் தன்
அடியார்கட்குச் சீருறு செல்வம் அருள்வான்.

     கு-ரை: மங்கை - சிவகாமவல்லி. மங்கை பாட நடமாடி. கொன்றைமரம்
விசேடமாகப் பூப்பது கார்காலத்தில் ஆதலால் “காருறு கொன்றை”
எனப்பட்டது “கண்ணி கார்நறுங்கொன்றை” எனப் புறநானூற்றில் வருவது
காண்க. சிறப்புப்பொருந்திய செல்வம் பெருகப் புனவாயிலில்
இருந்தருளியவன்.

     7. பொ-ரை: சிவபெருமான், பெரிய பாற்கடலைக் கடைந்த போது
ஏற்பட்ட நஞ்சை உண்டு மகிழ்ந்தவன். சுடுகாட்டில் இளமென் முலையுடைய
உமாதேவி பாட நடனமாடியவன். பகையசுரர்களின் புரம் மூன்றையும் அம்பு
எய்து அழித்தவன். திருப்புனவாயில் என்னும் திருத்தலத்தில்
எழுந்தருளியுள்ள அப்பெருமானின் திருவடிகளைப் போற்றித் தொழுபவர்
கட்கு எவ்விதத் துன்பமும் இல்லை.

     கு-ரை: பொருந்தலர் - பகைவர். நஞ்சு அமுதுண்டு, நடமாடி, புரம்
எய்து, புனவாயிலில் இருந்தவன் கழல் ஏத்த இடர் இல்லை.

     8. பொ-ரை: செருக்குடைய மனம் உடையவனும், வேல், வாள்
போன்ற படைக்கலன்களை உடையவனுமான அரக்கனான