பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)11. திருப்புனவாயில்481

இனமிகு தொல்புகழ் பாடல்ஆ டல்எழின்
     மல்கிய
புனமிகு கொன்றையந் தென்றலார்ந் தபுன
     வாயிலே.                           8

2918. திருவளர் தாமரை மேவினா னும்திகழ்
       பாற்கடற்
கருநிற வண்ணனும் காண்பரி யகட
     வுள்ளிடம்
நரல்சுரி சங்கொடும் இப்பியுந் திந்நல
     மல்கிய
பொருகடல் வெண்டிரை வந்தெறி யும்புன
     வாயிலே.                           9


இராவணனின் வலிமை அழியுமாறு, அழகும், பெருமையுமுடைய கயிலை
மலையால் அடர்த்த சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது, அவனுடைய
பழம்புகழைப் பல்வேறு வகைகளில் போற்றுகின்ற பாடல்களும், ஆடல்களும்
நிறைந்து அழகுற விளங்குகின்றதும், கொன்றை மலரின் நறுமணத்தைச்
சுமந்துவரும் தென்றல்காற்று வீசுகின்றதுமான திருப்புனவாயில் ஆகும்.

     கு-ரை: மனம்மிகு - ஊக்கம் மிகுந்த. வேலன் - இங்கு வேல்
முதலிய போர்ப்படைகளையுடையவன். வேல் - உபலக்கணம்.
இராவணனுக்குச் சிவபிரான் தந்த வாளைத் தவிரப் பிற ஆயுதங்களும்
உண்டு ஆதலால், வேலன் எனப்பட்டான். வேலன் - காரணக்குறி, காரண
இடுகுறியன்று. வலிஒல்கிட-வலிமை குறையும்படி, வனம் - சோலைகள். இனம்
மிகு - பல்வகைப்பட்ட, தொல் புகழ் - சிவபிரானது பழமையான புகழைப்
பாடுவதும், பாடி ஆடுவதும் ஆகிய அழகுமிகுந்த புனவாயில், அடர்த்தானது
இடம் ஆகும். புனம் - காடு; முல்லைநிலம். கொன்றை முல்லைக்
கருப்பொருளாதலால் ‘புனம் மிகுகொன்றை’ எனப்பட்டது. கொன்றை
மரச்சோலையிலே தென்றல் உலாவு வாயில் என்க. இது “தென்றலார்
புகுந்துலவும் திருத்தோணி புரத்துறையும் சடையார்’ என்று வேறு இடத்தும்
வருவதறிக.

     9. பொ-ரை: அழகிய தாமரையில் வீற்றிருக்கின்ற பிரமனும், விளங்கும்
திருப்பாற் கடலில் பள்ளி கொண்டுள்ள கருநிறத் திருமாலும்