பக்கம் எண் :

மூன்றாம் திருமுறையின்உரைத்திறம்49

     கொள்-வஞ்சிகொள்நுண்ணிடை 2-3

     உலாவிய-கார் உலாவிய வார்குழலார் - 2-7

     அமரும்-பந்து அமரும் விரல் மங்கை - 12-6

     ஆர்-போதை ஆர் பொற்கிண்ணத்து அடிசில் - 24-2

     தங்கிய-சகி தங்கிய சங்கவெண்தோடு - 57-1

     மலி-இலையின்மலி வேல் நுனைய சூலம் - 72-2

     கார்மலி நெறிபுரி சுரிகுழல் - 87-7

     பொலி - விற்பொலி நுதற்கொடி - 76-1

     தரும்-எரிதரும் உருவினர் - 84-7

     படும்-துடிபடும் இடைஉடை மடவரல் - 86-4

     உறு-மந்தரம் உறு திறல்மறவர் - 86-6

     சூது உறு வனமுலை - 87-6

     அமர்-அரும்பு அமர் கொங்கை - 100-1

3. இலக்கணக் குறிப்புக்கள்

அ. ஆகுபெயர்கள்

     கொவ்வை வாய்க் கொடியேர் இடையாள் - 2-9

     கொவ்வை-முதலாகு பெயர்

     போருலா எயில்சூழ்பொழில் -2-7

     போர்ப்பொறிகளைப் போர் என்றது காரிய ஆகுபெயர்

     ஆத்தமாக ஏத்தினோமே - 40-8

     ஆத்தம்-நண்பன்-பண்பாகு பெயர்