பாடல்
பயிலும் பரமர் பழமை எனலாம் - 70-5
பழமை-பழமையாகிய
பதி-பண்பாகுபெயர்
சீதம்
அது அணிதரு முகிழ் இள வனமுலை - 87-2
சீதம்-சந்தனக்குழம்பு-பண்பாகுபெயர்
காமனைக்
கவின் அழித்த -90-4
உடம்பைக்கவின்
என்றது தானியாகுபெயர்
கம்பின்
ஆர் நெடுமதில் காழி -93-11
கம்பு-சங்கு-சுட்ட
சுண்ணாம்பிற்கானது கருவியாகுபெயர்
ஏடு
அமர் பொழில் அணி இன்னம்பர் -95-11
ஏடு-இதழ்.
மலருக்கு ஆனமை சினையாகுபெயர்
உமை
அறிபவர் நசை அறி நாவினர் தாமே -98-7
நாவினர்-பேச்சை
உடையவர். நா-கருவியாகுபெயர்
சோலைகள்
சூழ்ந்த செம்மைத் தோணிபுரம் தானே - 100-1
செம்மை-செம்பொருள்-ஆகுபெயர்.
இப்பொருள் தருதலைச்
செம்பொருள் கண்டார் என்ற திருக்குறளுக்குப் பரிமேலழகர் உரைத்த
உரையான் அறிக.
துறைகெழு
கேதகை மீது வாசம் சூழ்வான் மலிதென்றல் - 105-6
வாசம்-மகரந்தம்-காரியஆகுபெயர்.
உன்னிய
சிந்தையின் நீங்க கில்லார்க்கு உயர்வாம்;
பிணிபோமே - 106-3
உயர்வுஆம்-முத்தி
எய்தும். உயர்வு-ஆகுபெயர்
ஆலை
ஆருர் ஆதி ஆனைக்காவே - 109-3
|