பக்கம் எண் :

மூன்றாம் திருமுறையின்உரைத்திறம்51

     ஆலை ஆரூர்-கருப்பங்கழிகளை உடைய திருவாரூர்.
ஆலை-தானியாகுபெயர்.

     படையில் அம் கையில் நல் அம் என்பதே -114-2

     அம்-அழகு. அஃது அணிகலனுக்கு ஆகியது காரிய ஆகுபெயர்.

     அம்கை விரலைக் குறித்தது முதலாகுபெயர்

     யாமா மா -117-3

     மா-பெருமை வாய்ந்தவனே-பண்பு ஆகுபெயர்.

     பரிமேலழகருடைய உரையில் தோய்ந்த புலமையால், தாம்
ஆகுபெயர்ப்பொருள் குறிப்பிடும் இடங்களிலெல்லாம் ஆகுபெயர்களின்
பலவகைகளையும் சுட்டிச் சொல்லுதல் இவருக்கு வழக்கம் என்பதனைக்
காண்கிறோம்.

ஆ. விகுதியைக் குறிப்பிட்டு விளக்கம் தருதல்

     வேயின் ஆர் பணைத்தோளி -1-8

     தோள்+இ. இகரம் பெண்பால்விகுதி

     பாம்பினோடு மதிசூடினானும் பசு ஏறியும் -7-2

     ஏறி-ஏறினவன். ஏறு+இ,இகரம் ஆண்பால்விகுதி

     வரைபொருதோள் இறச் செற்ற வில்லி -10-4

     வில்லி-இராமன். இகரம் ஆண்பாலில் வந்தது.

     வாழியாகக் கற்பவர் வல்வினைகள் மாயுமே -53-11

     வாழி-வாழ்வு தருவது. இகரம் கருவிப்பொருளில் வந்தது.

     பலவும் சேர் கனி உந்தி -64-11

     உந்தி-காவிரி. உந்து+இ. இகரம் லினைமுதற்பொருளில்