பக்கம் எண் :

52மூன்றாம் திருமுறையின்உரைத்திறம் 

வந்தது.

     இங்கு கதிர் முத்தினொடு பொன்மணிகள் உந்தி -72-4

     உந்தி-பெயர்.இகரம் வினைமுதற்பொருளில் வந்தது.

     கச்சை உடை பேணி -72-8

     பேணி-மேற்கொண்டவன். இகர விகுதி ஆண்பாலில் வந்தது.

     செறியுளார் புறவணி திருமுதுகுன்றமே -34-2

     செறியுள்-வளம் செறிதல்.

     செய்யுள் விக்குள்போல உள் தொழிற்பெயர் விகுதி.

     தாட்சியால் அறியாது தளர்ந்தனர் -44-9

     தாள்+சி-முயற்சியின் தன்மை. சி-பண்புப்பெயர்விகுதி.

இ. பிற இலக்கணக் குறிப்புகள்

     வேளரவு கொங்கை இளமங்கையர் -74-2

     வேளரவு-வேட்டல். அரவு-தொழிற்பெயர்விகுதி. தோற்றரவு, தேற்றரவு
போல.

     பிட்டர்தம் அறவுரை கொள்ளலும் -91-10

     எதிர்மறைப்பன்மை ஏவல்வினைமுற்று.

     கொள்+அல்+உம். அல் எதிர்மறை இடைநிலை. உம்-ஏவற்பன்மைவிகுதி.

     நாளும் நின்று ஏத்துமே -29-6

     ஏத்தும்-உம்-ஏவல் பன்மைவிகுதி

     பற்றுவிட்டீர் தொழும் -35-10