பக்கம் எண் :

மூன்றாம் திருமுறையின்உரைத்திறம்53

     தொழும்-ஏவற்பன்மை.

     நெறிபடு குழலியைத் தலைமிசைச் சுலவி -92-3

     சுலவி-கலந்தணிந்து.இ-வினையெச்சவிகுதி.

     பொன்னம்மல்கு தாமரைப்போது -53-8

     பொன்னம்-இலக்குமி. தனிமொழியும் சாரியை பெற்றது.

     மருமானார் இவர் என்று மடவாளொடு உடனாவர் -64-2

     என்று-என்ன என்பதன் வினையெச்சத்திரிபு.

     தாட்சியால் அறியாது தளர்ந்தனர் -44-9

     தாட்சி-தாழ்ச்சி என்பதன் மரூஉ. வீரசோழிய விதிப்படியும் ஆம்.

     சடைக்கங்கையான், இடம் மேவிய மங்கையான் -48-1

     கங்கையைச் சடையில் தாங்கியவன், மங்கையை இடம்
மேவியவன்-வடமொழி விதி.

     அந்தண் காழிப் பந்தன் சொல்லை -40-11

     பந்தன்-ஒருபுடைப்பெயர் கொளல்-வடமொழிவிதிபற்றி.

     உண்பின உலகில் - 14-11

     உண்பின-குறிப்புப்பெயரெச்சம்

     மைய கண் மலைமகள் - 19-2

     மைய-குறிப்புப்பெயரெச்சம்.

     சம்பந்தன செந்தமிழ் - 24-11

     சம்பந்தன-அகரம் ஆறன் உருபு.

     பந்தணை மெல் விரலாளொடும் பயில்விடம் - 28-3

     பயில்விடம்-வகரம் உடம்படுமெய் அல்லாமெய்