பதிக
வரலாறு:
பொன்னிதழ்க்
கொன்றை வன்னிச் சென்னியர், திருவெண்
காட்டில், மன்னியசீர்ச்சண்பைமன்னரைத்துன்னிய பெரு மகிழ்ச்சி உடன்
பொங்கக் கொண்டு சென்ற திருத்தொண்டர் சூழக் கோயிலுட் புகுந்து,
தொழுது, முக்குளம் பாடி, கண்காட்டும் நுதலைக்கருதிப் பாடிய பதிகமாலை
இத்திருப்பதிகம்.
பண்:
காந்தார பஞ்சமம்
ப.
தொ. எண்: 273 |
|
பதிக
எண்: 15 |
திருச்சிற்றம்பலம்
2954. |
மந்திர
மறையவை வான வரொடும் |
|
இந்திரன்
வழிபட நின்ற எம்மிறை
வெந்தவெண் ணீற்றர்வெண் காடு மேவிய
அந்தமு முதலுடை யடிக ளல்லரே. 1
|
1.
பொ-ரை: பஞ்சாக்கர மந்திரத்தைத் தனி நடுப்பகுதியில் கொண்ட
வேதங்களும், தேவர்களும், இந்திரனும் வழிபட வீற்றிருக்கின்ற எங்கள்
இறைவனாய், வெந்த வெண்ணீற்றினைத் திருமேனியில் பூசித் திருவெண்காடு
என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமான் அந்தமும்,
ஆதியுமாகிய அடிகள் அல்லரோ?
கு-ரை:
ஸ்ரீ பஞ்சாட்சரமாகிய திவ்விய மந்திரத்தைத் தனி
நடுப்பகுதியுள்ளதாகிய வேதங்களும் தேவர்களும் இந்திரனும் வழிபாடு புரிய
எழுந்தருளிய எமது பதி. இது, முதல் இரண்டடிகளுக்கு உரை. இறுதியாம்
பொருள் எவற்றினுக்கும் இறுதியானவரும் முதலாம், பொருள் எவற்றிற்கும்
முதலானவரும் ஆவர்.
முதல் அடியில்
வரும் எண் ஒடுச் சொல்லை மறையொடும்,
இந்திரனொடும் ஒட்டுக. மந்திர மறைகளோடும் தேவர்களோடும் இந்திரனும்
வழிபட நின்ற இறை. மறை அவை, இதில் அவை, பகுதிப் பொருள் விகுதி.
|