பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)14. திருப்பைஞ்ஞீலி505

இத்திருப்பதிகத்தை ஓதவல்லவர்கள், வினைப்பயன்களை நுகர்வதற்காகப்
பிறந்துள்ள இப்பூவுலகில் ஓங்கி வாழ்வர்.

     கு-ரை: கண்-இடமெல்லாம். புனல்-நீர் நிலையையும்,
விளைவயல்-விளையும் வயல்களையும், உடைய. காழி-சீகாழியுள்.
கற்பகம்-கற்பகத்தருவாகிய. உண்பின உலகினில்-முற்பிறப்பில் செய்த
வினைகளை நுகர்தற்குரியபுவனமாகிய இவ்வுலகத்தில். உண்பின-குறிப்புப்
பெயரெச்சம்.

திருஞானசம்பந்தர் புராணம்

பண்பயில் வண்டினம் பாடுஞ் சோலைப்
     பைஞ்ஞீலி வாணர் கழல்ப ணிந்து
மண்பர வுந்தமிழ் மாலை பாடி
     வைகி வணங்கி மகிழ்ந்து போந்து
திண்பெருந் தெய்வக் கயிலை யில்வாழ்
     சிவனார் பதிபல சென்றிறைஞ்சிச்
சண்பை வளந்தரு நாடர் வந்து
     தடந்திரு ஈங்கோய் மலையைச் சார்ந்தார்.

                                 -சேக்கிழார்.

 

மும்மணிக் கோவை

மலைத்தலங்கள் மீதேறி மாதவங்கள் செய்து
முலைத்தடங்கள் நீத்தாலும் மூப்பர்-கலைத்தலைவன்
சம்பந்தற் காளாய்த் தடங்காழி கைகூப்பித்
தம்பந்தந் தீராதார் தாம்.

 


தாமரை மாதவி சேறிய நான்முகன் றன்பதிபோற்
காமரு சீர்வளர் காழிநன் னாடன் கவித்திறத்து
நாமரு மாதவர் போல்அழ கீந்துநல் வில்லிபின்னே
நீர்மரு வாத சுரத்தெங்கன் ஏகும்என் நேரிழையே.

                         -நம்பியாண்டார் நம்பி.