2952. |
பீலியார்
பெருமையும் பிடகர் நூன்மையும் |
|
சாலியா
தவர்களைச் சாதி யாததோர்
கோலியா வருவரை கூட்டி யெய்தபைஞ்
ஞீலியான் கழலடி நினைந்து வாழ்மினே. 10
|
2953. |
கண்புனல்
விளைவயற் காழிக் கற்பகம் |
|
நண்புண
ரருமறை ஞான சம்பந்தன்
பண்பினர் பரவுபைஞ் ஞீலி பாடுவார்
உண்பின வுலகினி லோங்கி வாழ்வரே.
11 |
திருச்சிற்றம்பலம்
உடைமைப் பொருளாகத்
தான் உடையோனாகிய (உலகத்துப் பதியாகிய)
கடவுள். பார்-பூமி. இங்கே உலகம் என்ற பொருளில் வந்தது.
போதுறைவானும் மாலும் காண்கிலர்.
10.
பொ-ரை: மயிற்பீலி யேந்திப் பெருமை கொள்ளும் சமணர்களும்,
திரிபிடகம் என்னும் சமயநூலுடைய புத்தர்களும், தங்கள் நூற்பொருளோடு
பொருந்தாதவர்களை வாதிட்டு வெல்லும் வல்லமையில்லாதவர்கள். எனவே,
அவர்களின் உரைகளைக் கேளாது, வளைக்க முடியாத மேருமலையை
வில்லாக வளைத்து அம்பினைத் தொடுத்து எய்து முப்புரங்களை
எரித்தவனும், திருப்பைஞ்ஞீலி என்னும் திருத்தலத்தில்
வீற்றிருந்தருளுகின்றவனுமான சிவபெருமானின் கழலணிந்த திருவடிகளை
நினைந்து வணங்கி வாழ்வீர்களாக!
கு-ரை:
பீலியார்-மயிற்பீலியை யேந்திவரும் சமணர். எறும்பு முதலிய
உயிர்களுக்கும் துன்பம் நேராதவாறு மெல்லிய பொருளாகிய மயில்
தோகையால் வழியைச் சீத்துச் செல்வது சமணமுனிவர் செயல். பிடகர்-புத்தர்;
புத்த தருமம் உரைக்கும் நூல் பிடகம் எனப்படும். வகைநோக்கித் திரிபிடகம்
எனவும் படும். நூன்மை-நூலின் பொருள். சாலியாதவர்-சாதியாதவர்.
11.
பொ-ரை: தண்ணீர் பாய்கின்ற வயல்வளமுடைய சீகாழியில்,
கற்பகமரம் போன்று அன்பினால் அனைத்துயிர்கட்டும் நலம் சேர்க்கும்
அருமறைவல்ல ஞானசம்பந்தன், நற்பண்புடையவர் வணங்கும்
திருப்பைஞ்ஞீலி என்னும் திருத்தலத்திலுள்ள இறைவனைப் பாடிய
|