பக்கம் எண் :

510திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

2961. மலையுட னெடுத்தவல் லரக்கன் நீள்முடி
  தலையுட னெரித்தருள் செய்த சங்கரர்
விலையுடை நீற்றர்வெண் காடு மேவிய
அலையுடைப் புனல்வைத்த அடிகள் அல்லரே.   8

2962. ஏடவிழ் நறுமலர் அயனு மாலுமாய்த்
  தேடவுந் தெரிந்தவர் தேர கிற்கிலார்
வேடம துடையவெண் காடு மேவிய
ஆடலை யமர்ந்தஎம் அடிகள் அல்லரே.        9

2963. போதியர் பிண்டியர் பொருத்தம் இல்லிகள்
  நீதிகள் சொல்லியும் நினைய கிற்கிலார்


     8. பொ-ரை: கயிலைமலையை எடுத்த கொடிய அரக்கனாகிய
இராவணனின் நீண்டமுடி, தலை, உடல் ஆகியவற்றை நெரித்து, பின்
அவன் தவறுணர்ந்து சாமகானம் பாட, அருள் செய்த சங்கரர்,
மதிப்புடைய திருநீற்றினைப் பூசியவர். அலையுடைய கங்கையைச்
சடையில் தாங்கித் திருவெண்காடு என்னும் திருத்தலத்தில்
வீற்றிருந்தருளும் பெருமான் அவர் அல்லரோ?

     கு-ரை: விலையுடை நீற்றர். அன்பே விலை. ஆநந்தமே பயன்.
வைத்த-சடையில் வைத்த.

     9. பொ-ரை: பூவிதழ்களுடைய நறுமணம் கமழும் தாமரையில்
வீற்றிருக்கும் பிரமனும், திருமாலும் திருமுடியையும், திருஅடியையும்
காணத்தேடியும் காண்பதற்கு அரியவராய் நெருப்புமலையாய்
விளங்கியவரும், பலபல வேடம் கொள்பவருமான இறைவன்
திருவெண்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்து திருநடனம்
புரிதலை விரும்பிய அடிகள் அல்லரோ?

     கு-ரை: ஏடு-பூ இதழ். தேடவும் தெரிந்தவர் தேரகிற்கிலார்
வேடம் உடைய திருவெண்காடு ஆடலை. அமர்ந்த-விரும்பிய. எம்
அடிகள் எனத் தனித்தனிக் கூட்டுக.

     10. பொ-ரை: புத்தரும், சமணரும் பொருத்தம் இல்லாதவராய்,
இறையுண்மையை உணர்த்தும் நீதிகளை எடுத்துரைத்தும், நல்வாழ்வு