2959. |
மண்ணவர்
விண்ணவர் வணங்க வைகலும் |
|
எண்ணிய தேவர்கள் இறைஞ்சும் எம்மிறை
விண்ணமர் பொழில்கொள்வெண் காடு மேவிய
அண்ணலை அடிதொழ அல்லல் இல்லையே. 6
|
2960. |
நயந்தவர்க்
கருள்பல நல்கி யிந்திரன் |
|
கயந்திரம்
வழிபடநின்ற கண்ணுதல்
வியந்தவர் பரவுவெண் காடுமேவிய
பயந்தரு மழுவுடைப் பரம ரல்லரே 7 |
என்பதற்கு அடியார்
என வினைமுதல் வருவித்துரைக்கப்படும். அடியார்கள்
குடியாகப் பாதத்தைத் தொழநின்ற பரஞ்சோதி பயிலும் என்புழிப்போல.
(தி.2. பா.43. பா.5.) பரமர்-பரம்பொருள், மேலான பொருள்.
6.
பொ-ரை: மண்ணுலகத்தோரும், விண்ணுலகத்தோரும், மற்றுமுள்ள
தேவர்களும் தினந்தோறும் எங்கள் இறைவனை வழிபட்டுப் போற்றுகின்றனர்.
வானளாவிய சோலைகளையுடைய திருவெண்காடு என்னும் திருத்தலத்தில்
வீற்றிருக்கின்ற அப் பெருமானின் திருவடிகளை வணங்குபவர்கட்குத் துன்பம்
இல்லை.
கு-ரை:
மண்ணவரும் விண்ணவரும், ஏனை விண்ணவரும் தம்
பொருட்டு எம்மிறையை வணங்குகின்றனர். அவர்கள் திருவெண்காடு மேவிய
அண்ணலைக் கடிது வணங்கிப் பிறவியறுக்க அறிகிலர் என்பது இப்பாடலிற்
குறித்த பொருளாகும். அது வாழ்த்துவதும் வானவர்கள் தாம்வாழ்வான்
என்னம் திருவாசக (தி.8 பா.20)த்தின் கருத்தாகும்.
7.
பொ-ரை: விரும்பி வழிபடும் அடியவர்கட்கு வேண்டுவன
வேண்டியவாறு அருளி, இந்திரனின் வெள்ளையானை வழிபட அதற்கும்
அருள்புரிந்தவர் நெற்றிக்கண்ணுடைய சிவபெருமான் ஆவார். அனைவரும்
அந்த இன்னருளை வியந்து போற்றும்படி திருவெண்காடு என்னும்
திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் சிவபெருமான் பயந்தரு மழுப்படையுடைய
பரமர் அல்லரோ?
கு-ரை:
கயந்திரம் வழிபட:-கஜேந்திரம் பூஜைசெய்ய. யானை
(கஜங்)களுக்குத் தலைமையுடையது கஜேந்திரம்.
|