|
வெஞ்சின
மருப்பொடு விரைய வந்தடை
குஞ்சரம் உரித்தனர் கொள்ளிக் காடரே. 6 |
2971. |
இறையுறு
வரிவளை யிசைகள் பாடிட |
|
அறையுறு கழலடி ஆர்க்க ஆடுவர்
சிறையுறு விரிபுனல் சென்னி யின்மிசைக்
குறையுறு மதியினர் கொள்ளிக் காடரே. 7 |
2972.
|
எடுத்தனன்
கயிலையை யியல்வ லியினால் |
|
அடர்த்தனர்
திருவிர லால்அ லறிடப் |
தொடும்படி உயர்ந்துள்ள
கயிலைமலையில் மகிழ்ந்திருந்து நாள் தோறும்
தம்மை வழிபடுபவர்கட்கு அருள் பாலிக்கும் இறைவர், கொடிய
சினத்தோடும், கொம்போடும் வேகமாக வந்தடைந்த யானையின் தோலை
உரித்துப் போர்த்துக் கொண்டவர். அப்பெருமான் திருக்கொள்ளிக்காடு
என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார்.
கு-ரை:
செம்பஞ்சுக்குழம்பு தோய்ந்த மெல்லிய பாதத்தையுடைய
பதுமை போன்ற அம்பிகை. மஞ்சு-மேகம். கொடிய சினத்தோடும்
மருப்போடும் வந்தடைந்த குஞ்சரம் என்க.
7.
பொ-ரை: திருக்கையில் விளங்கும் அழகிய வளையல்களையுடைய
உமாதேவி இசைபாட, திருவடிகளில் விளங்கும் வீரக்கழல்கள் ஒலிக்க,
இறைவர் திருநடனம் புரிகின்றார். அப்பெருமான் பாய்கின்ற கங்கையைத்
தடுத்துச் சடையில் தாங்கி, கலைகுறைந்த சந்திரனையும் தலையில் சூடி,
திருக்கொள்ளிக்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார்.
கு-ரை:
இறை - முன்கை. உறும் - பொருந்திய. வரிவளை
-கீற்றுக்களையுடைய வளையலையணிந்த உமாதேவியார். வரிவளை என்பது
அன்மொழித்தொகை. அறைஉறு-ஒலித்தலையுடைய. சிறை
உறு-தடுக்கப்படுதலையுடைய. குறையுறுமதி - கலை குறைந்த சந்திரன்.
8.
பொ-ரை: தன்னுடைய வலிமையினால் கயிலைமலையை
அப்புறப்படுத்த எடுத்த இராவணனை, தம் காற்பெரு விரலையூன்றி
அம்மலையின்கீழ் அடர்த்து அவறும்படி செய்ய, இராவணன் தவறு
|