|
படுத்தன
ரென்றவன் பாடல் பாடலும்
கொடுத்தனர் கொற்றவாள் கொள்ளிக் காடரே. 8
|
2973.
|
தேடினா
ரயன்முடி மாலுஞ் சேவடி |
|
நாடினா ரவரென்று நணுக கிற்றிலர்
பாடினார் பரிவொடு பத்தர் சித்தமும்
கூடினார்க் கருள் செய்வர் கொள்ளிக் காடரே. 9 |
2974.
|
நாடிநின்
றறிவில்நா ணிலிகள் சாக்கியர் |
|
ஓடிமுன்
னோதிய வுரைகள் மெய்யல
பாடுவர் நான்மறை பயின்ற மாதொடும்
கூடுவர் திருவுருக் கொள்ளிக் காடரே.
10 |
ணர்ந்து, தன்னை வருத்திய
சிவனைப் போற்றிச் சாமகானம் பாட, இறைவர்
இரங்கி வீரவாளை அருளினார். அப்பெருமானார் திருக்கொள்ளிக்காடு
என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார்.
கு-ரை:
இயல் - தனக்கு உள்ள. வலியினால் - வலிமையினால்.
அலறிடத் திருவிரலால் அடர்த்தனர் என்க. நம்மைச் சிவன் வருத்தினன்
என்று தன்னுள் நினைத்து. அவன் - அவ்விராவணன்.
9.
பொ-ரை: பிரமன் திருமுடியினையும், திருமால் திருவடியையும்
தேட, அவர்களால் எப்பொழுதும் அணுகமுடியாதவராய் விளங்கும்
சிவபெருமான், பக்தர்கள் மனம் ஒன்றி அன்பால் அகம் குழைந்து பாட
அருள்செய்வார். அப்பெருமானார் திருக்கொள்ளிக்காடு என்னும்
திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார்.
கு-ரை:
அயன்முடி, மால் சேவடி, தேடினார் என்க. தேடினவர்களாகிய
அவர்களால் எப்பொழுதும் அணுக முடியாதவராயிருப்பர். அன்போடு
பாடியவர்களாய் மனமும் ஒருமைப்பட்ட பத்தர்கட்கு நணுகுபவராய்
இருப்பதன்றி அருளும் செய்வர் திருக்கொள்ளிக்காடர்.
10.
பொ-ரை: இறையுண்மையை உணரும் அறிவில்லாத நாணமற்ற
சமணரும், புத்தர்களும் முனைந்து சொல்லும் உரைகள் மெய்யானவை அல்ல.
அவர்களைச் சாராதுவிட்டு, நான்கு வேதங்களை அருளிய சிவபெருமான்,
நன்கு பழகிய உமாதேவியோடு திருக்கொள்ளிக்காடு என்னும் திருத்தலத்தில்
வீற்றிருந்தருளும் திருக்கோலத்தைக் கண்டு தரிசித்து உய்தி அடையுங்கள்.
|