பக்கம் எண் :

532திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

  அரவமோ டுயர்செம்மல் அம்பர்க் கொம்பலர்
மரவமல் கெழினகர் மருவி வாழ்வரே.         4

3002. சங்கணி குழையினர் சாமம் பாடுவர்
  வெங்கனல் கனல்தர வீசி யாடுவர்
அங்கணி விழவமர் அம்பர் மாநகர்ச்
செங்கணல் இறைசெய்த கோயில் சேர்வரே.     5


பாடி ஆடுவார். பாம்பணிந்து உயர்ந்து விளங்கும் செம்மலாகிய
சிவபெருமான், கொம்புகளில் மலர்களையுடைய வெண்கடம்ப மரங்கள்
நிறைந்து சோலைகளையுடைய அழகிய அம்பர் மாநகரில்
வீற்றிருந்தருளுகின்றார்.

     கு-ரை: மல்கு இளமதி - மிகுந்த இளமையையுடைய பிறைச் சந்திரன்.
ஈடுஉயர் பரவமல்கு அருமறை - (தன்) பெருமையின் உயர்வைத்
துதிப்பதற்குப் பொருந்திய அரிய வேதத்தைப்பாடி ஆடுவர். ஈடு - பெயர்
உயர் - (உயர்வு) ‘உ’ பண்புப்பெயர் விகுதி. அரவமோடு உயர் செம்மல்
அம்பர் - ஆரவாரத்தோடு உயர்ந்த (அரிசில் நதியின்) மிகு வளத்தையுடைய
அம்பர். செம்மல் - மிகுதி. கொம்பு ... நகர் - கொம்புகளில் மலர்களை
யுடைய வெண்கடம்பச் சோலைகளையுடைய (அம்பர்) நகர்.

     5. பொ-ரை: இறைவர் சங்கினாலாகிய குழை அணிந்த காதினர்.
சாமவேதத்தைப் பாடுவார். மிகுந்த வெப்பமுடைய நெருப்புச் சுவாலை வீசத்
தோள்வீசி ஆடுவார். அழகிய திருவிழாக்கள் நடைபெறும் அம்பர் மாநகரில்
கோச்செங்கட்சோழ மன்னன் எழுப்பிய திருக்கோயிலில் அப்பெருமானார்
வீற்றிருந்தருளுகின்றார்.

     கு-ரை: சங்கை அணிந்த காதையுடையவர். சாமவேதத்தைப் பாடுவார்
கொடிய நெருப்புச் சுவாலிக்கத் தோளை வீசி ஆடுவர் - என்பது
முதலிரண்டடியின் பொருள். சங்கு - ஆகு பெயர்.

     “எண்தோள் வீசி நின்றாடும் பிரான்” என அப்பர் பெருமான் வாக்கில்
வருவதால் வீசி என்பதற்குத் தோள்வருவித்துரைக்கப்பட்டது. அழகிய
திருவிழாக்களை உடைய அம்பர். செங்கண்நல் இறை - நல்ல கோச்செங்கட்
சோழர், செய்த கோயில்.