3024. |
சூடுவர் சடையிடைக் கங்கை நங்கையைக் |
|
கூடுவர்
உலகிடை ஐயங் கொண்டொலி
பாடுவர் இசைபறை கொட்ட நட்டிருள்
ஆடுவர் கருக்குடி அண்ணல் வண்ணமே. 5 |
3025. |
இன்புடை யாரிசை வீணை பூணரா |
|
என்புடை
யாரெழின் மேனி மேலெரி
முன்புடை யார்முதல் ஏத்தும் அன்பருக்
கன்புடை யார்கருக் குடியெம் அண்ணலே. 6 |
கு-ரை:
ஊன் - உடம்பு. அறுக்க - ஒழிக்க. உன்னுவீர் - நினைக்கும்
மாந்தரீர். கான் இடை ஆடலான் - சுடுகாட்டில் ஆடுதலை யுடைவன். கழல்
- திருவடி.
5.
பொ-ரை: இறைவர் சடைமுடியில் கங்கையைச் சூடி உள்ளார். தம்
திருமேனியில் ஒரு பாகமாக உமாதேவியை வைத்துள்ளார். இவ்வுலகில்
பிச்சை ஏற்கும் பொழுது இசையோடு பாடுவார். பறைகொட்ட நள்ளிருளில்
நடனம் ஆடுவார். இது திருக்கருக்குடியில் வீற்றிருந்தருளும் தலைவரான
சிவபெருமானின் அருள் தன்மையாகும்.
கு-ரை:
நங்கை - பெண்களிற் சிறந்தவள். ஒலிபாடுவர் இசை -
இசையை ஒலியோடு பாடுவர். நட்டு நள் + அ + து நள்ளது = நடுவினது;
அகரச் சாரியை நீக்கினால் நள் + து = நட்டு என்று ஆகும். நட்டு இருள்
- நடுவினதாகிய இருளில். நடு இராத்திரியில் ஆடுவர். நள்ளிருளில் நட்டம்
பயின்றாடும் நாதனே என்பது திருவாசகம். அண்ணல் வண்ணம் - இது
கருக்குடி அண்ணல் தன்மையாம். நடு + இருள் - நட்டிருள் என்பதே தக்கது.
6.
பொ-ரை: திருக்கருக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும்
தலைவரான சிவபெருமான் வீணையை இசைத்துப் பாடுவதில் மகிழ்பவர்.
தம்முடைய அழகிய திருமேனியில் பாம்பையும்,எலும்பையும் ஆபரணமாக
அணிந்துள்ளவர். எரிகின்ற நெருப்பைத் திருக்கரத்தில் ஏந்தியுள்ளவர்.
யாவற்றுக்கும் மூலப் பொருளாகிய, முதற்பொருளாக விளங்குபவர்.
அன்பர்களிடத்து அன்புடையவர்.
கு-ரை:
இன்பு - வீணை - இசை வீணை பாடுதலில் மகிழ்
|