பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)21. திருக்கருக்குடி545

3026. காலமும் ஞாயிறுந் தீயும் ஆயவர்
  கோலமும் முடியர வணிந்த கொள்கையர்
சீலமும் உடையவர் திருக்க ருக்குடிச்
சாலவும் இனிதவ ருடைய தன்மையே.          7

3027. எறிகடல் புடைதழு விலங்கை மன்னனை
  முறிபட வரையிடை யடர்த்த மூர்த்தியார்
கறைபடு பொழின்மதி தவழ்க ருக்குடி
அறிவொடு தொழுமவர் ஆள்வர் நன்மையே.    8


வுடையார். பூண் - ஆபரணமாக. அரா என்பு உடையார் - பாம்பையும்
எலும்பையும் உடையவர். மேனிமேல் எரிமுன்பு உடையார். முதல் - காரணம்.
முதல் ஏத்தும் அன்பர் - உலகமாகிய காரியத்துக்கு இறைவன் நிமித்த
காரணமாம் தன்மையை அறிந்து ஏத்தும் இக்கருத்து “கோலத்தாய் அருளாய்
உனகாரணம் கூறுதுமே” என்னும் இத்திருமுறை முதற்பதிகத்தும் காண்க.

     7. பொ-ரை: சிவபெருமான் கால தத்துவமாகவும், அதனைக் கடந்தும்
விளங்குபவர். ஞாயிறு முதலிய சுடராக ஒளிர்பவர். நெருப்பு முதலிய
பஞ்சபூதங்களானவர். தம் சடைமுடியில் பாம்பணிந்தவர். சிறந்த புகழை
உடையவர். திருக்கருக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற
அப்பெருமானின் தன்மை சாலவும் இனிதாகும்.

     கு-ரை: காலம் இடம் முதலிய பொருள்களும் சூரியன் முதலிய
கோள்களும் தீ முதலிய பஞ்சபூதங்களும், ஆயவர் - ஆனவர்.

     8. பொ-ரை: அலைவீசுகின்ற கடலையுடைய இலங்கை மன்னனான
இராவணனை நிலை கெடும்படி மலையிடையில் வைத்து அடர்த்த
சிவமூர்த்தியாகிய இறைவர், மரங்களின் அடர்த்தியால் இருண்ட
சோலைகளில் சந்திரன் தவழும் திருக்கருக்குடி என்னும் திருத்தலத்தில்
வீற்றிருந்தருளுபவராய், தம்மை ஞானத்தால் தொழும் அடியவர்கட்கு
நன்மையைத் தந்தருளி ஆட்சி செய்கின்றார்.

     கு-ரை: கறைபடு பொழில். நன்மை ஆள்வர் - நன்மைகளையெல்லாம்
உடையராயிருப்பர். அறிவொடு தொழுமவர் என்ற இலேசினான்
அபுத்திபூர்வமாகச் செய்யும் சிவபுண்ணியமும் பயன் தாராதொழியாது
என்பதும் கொள்க.